நிலை வாசலில் எதற்காக பொட்டு வைக்கிறார்கள்? நிலை வாசலில் பொட்டு வைக்கும் போது செய்யக்கூடாத தவறு என்ன?

door-vasal-lakshmi

நிலைவாசல் என்பது நம் வீட்டின் உடைய பிரதான வாசல் ஆகும். வாசக்கால் வைக்கும் பொழுது தனியாக அதற்கென்று பூஜைகள் செய்யப்படுவது உண்டு. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வாசல் தலைவாசல், நிலைவாசல் என்றும் கூறுவது உண்டு. இந்த வாசக்கால் ஒரு வீட்டின் உடைய இதயம் போன்றது ஆகும். வீட்டின் எந்த பொருட்களுக்கும் நாம் மரியாதை செய்வது கிடையாது. ஆனால் தலைவாசலுக்கு நம் முன்னோர்கள் மஞ்சள், குங்குமம் இட்டு அதற்கு அதிக மரியாதை செலுத்துவதை பார்த்திருப்போம். அதைத் தொன்றுத் தொட்டு அனைவரும் கடைபிடித்து வருகின்றோம். ஆனால் அது எதற்காக என்று தெரியுமா? நிலை வாசலில் பொட்டு வைக்கும் பொழுது எப்படி வைக்க வேண்டும்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vasal-kathavu

நிலை வாசலில் தெய்வங்கள் குடியிருப்பதாக ஐதீகம் உள்ளது. குறிப்பாக குலதெய்வம் ஒருவருடைய வீட்டில் தலைவாசலில் தான் வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. தலைவாசல் பல்வேறு சமயங்களில் நமக்கு பல்வேறு அறிகுறிகள் மூலம் நல்லவற்றை செய்திருக்கலாம். பல வருடங்களாக புழங்கிய அந்த வீட்டில் திடீரென நிலை வாசலில் கால் தடுக்கிறது என்றால் உடனே வீட்டு பெரியவர்கள் சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் அருந்தி விட்டு செல்லுமாறு கூறுவார்கள். இது எதற்காக தெரியுமா?

நிலைவாசலில் வாசம் செய்யும் தெய்வங்கள் நம்மை தடுக்கிறார்கள் என்றால், நமக்கு வர இருக்கும் ஆபத்துகள் முன்கூட்டியே உணர்த்த படுவதாக சகுன சாஸ்திரம் கூறுகிறது. நாம் வெளியே செல்லும் நேரம் சற்று தாமதம் ஆனால், நமக்கு வர இருக்கும் ஆபத்தை நீங்கிவிடும். அதற்காகவே இவ்வாறு நிகழ்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவசர அவசரமாக நாம் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது, நமக்கு நேரம் சரியில்லை என்றால்! விபத்து கூட நேரலாம். யாருக்கு? எப்பொழுது? என்ன நிகழும்? என்பது முன்கூட்டியே யாருக்கும் தெரிவதில்லை.

Home 2

இதுபோன்ற அபசகுனங்கள் நிகழும் பொழுது நாம் தான் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து காப்பதற்கு வீட்டின் தெய்வங்கள் நமக்கு அறிகுறியாய் உணர்த்துவது தலை வாசல் வழியாக தான். அத்தகைய பெருமை மிகுந்த தலைவாசலுக்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக தான் அதற்கு மஞ்சள், குங்குமம் இடுவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றை நம் முன்னோர்கள் செய்து வந்தார்கள்.

பிரசித்தி பெற்ற கோவில்களில் நாம் நுழையும் பொழுது அதன் வாசற்படியை ஒருபொழுதும் நாம் மிதிப்பது இல்லை. வாசல் படியை தாண்டி தான் உள்ளே செல்வோம். அதே போல வீட்டிலும் வாசல் படியை மிதிக்க கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். மஞ்சள், குங்குமம் இடாமல் விளக்கு ஏற்றுவது துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

மஞ்சள், குங்குமம் இடும் பொழுது ஒற்றைப்படையில் பொட்டுகள் வைக்க வேண்டும். மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் நிலை வாசலை அலங்கரிக்க வேண்டும். சில வைணவர்கள் நாமம் எல்லாம் போட்டு வைப்பார்கள். அது அவரவரின் குல வழக்கப்படி எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அது போல் வாசலில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைக்க மகாலட்சுமியே விரும்பி வீட்டிற்குள் வருவாளாம். மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய, வீட்டின் தலை வாசலை மதிக்க கற்றுக் கொள்வது நல்லது.