வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்க நிலை வாசலில் இந்த 1 படத்தை வையுங்கள். கெட்ட எண்ணத்தோடு வருபவர்கள் கூட, வாசலுக்குள் நுழையாமல் அப்படியே திரும்பி ஓடி விடுவார்கள்.

vasal
- Advertisement -

வீடு என்று இருந்தால் நிலை வாசல் படிக்குள் நல்லதும் நுழையும். கெட்டதும் நுழையும். நல்ல எண்ணம் கொண்டவர்களும் வீட்டிற்குள் வருவார்கள். கெட்ட எண்ணத்தோடு பொறாமை குணத்தோடு, கண் திருஷ்டி வைக்க வரும் சிலரும் இருக்கத்தான் செய்வார்கள். இதையெல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் பாதுகாப்பிற்காக நாம் சில விஷயங்களை நிலை வாசலில் வைத்து தான் ஆக வேண்டும். உங்களுக்கு சாஸ்திரத்தின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் பின் சொல்லக்கூடிய விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம்.

நிலைவாசையில் பாதுகாப்புக்காக வைக்கக்கூடிய பொருட்கள் என்ற பட்டியலை பார்த்தால் சாஸ்திர ரீதியாக நிறைய உள்ளது. அதில் முக்கியமான சில பொருட்களை மட்டும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் முழு முதல் கடவுளான விநாயகர் படம். நிறைய பேர் கண் திருஷ்டி விநாயகரை தான் நிலை வாசலுக்கு வெளியே வைப்பார்கள். அதை வைப்பதன் மூலம் தவறு கிடையாது. இருப்பினும் பாதுகாப்பு கவசம் நம்முடைய வீட்டிற்கு தேவை என்றால் கற்பக விநாயகரை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் வைக்க வேண்டும். கற்பக விநாயகருக்கு காக்கக்கூடிய சக்தி அதிகம் உள்ளது.

- Advertisement -

நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில், வெளிப்புறத்தை பார்த்தவாறு கற்பக விநாயகரின் திரு உருவப்படம் இருக்கலாம். அதாவது வீட்டிற்குள் நுழைபவர்களுடைய கண்களில் கற்பக விநாயகர் திருவுருவப் படம் தெரிய வேண்டும். கற்பக விநாயகரை பார்த்து விட்டு நம் வீட்டிற்குள் வருபவர்கள் கெட்ட எண்ணத்தோடு வரமாட்டார்கள். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுடைய கண் திருஷ்டியையும் நம் வீட்டிற்குள் நுழைய விடாது.

அடுத்தபடியாக கண் திருஷ்டி கவசமாக இருப்பது கற்றாழை செடி. இந்த கற்றாழை செடியை சில பேர் வீட்டில் வைக்கலாம் என்று சொல்லுவார்கள். சில பேர் வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். கற்றாழை செடியை காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் நிலை வாசலுக்கு வெளியே கட்டி வைக்க கூடிய பழக்கத்தை பின்பற்றி வந்தார்கள். ஆகையால் எந்த ஒரு பயமும் இல்லாமல் ஒரு கற்றாழை செடியை நிலை வாசலுக்கு வெளியில் மேல் பக்கத்தில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். தவறு கிடையாது. இது கண் திருஷ்டி கவசமாக இருக்கும். ஒரு சில பேர் கற்றாழை செடிக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து லட்சுமி கடாட்சத்தோடு வழிபாடு கூட செய்கிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

- Advertisement -

நாம் வெளியே செல்கின்றோம். நம்மை சுற்றி எத்தனையோ நல்லது கெட்டது நடக்கிறது. வீதியில் செல்லும் போது நாம் சில விஷயங்களை மிதிக்க வேண்டிய சூழ்நிலை. சில விஷயங்களை தாண்ட வேண்டிய சூழ்நிலை. இதன் மூலம் ஏதாவது ஒரு கெடுதல் நம்மோடு ஒட்டிக்கொண்டு வீட்டிற்குள் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இப்படி நம் உடம்போடு ஒட்டி இருக்கும் துர்சக்திகளை கூட நிலை வாசல் படியோடு தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி வெளிருக்கன் கட்டைக்கு உண்டு. சிறிய வெள்ளருக்கன் கட்டை மஞ்சள் கயிறு, கருப்பு கயிறில் கட்டி எல்லாம் தற்போது விற்கப்படுகிறது. அதை வாங்கி நிலை வாசலில் கட்டி வைத்தாலும் நமக்கு நன்மையை தரும்.

இவ்வாறு உங்கள் நிலை வாசலை பாதுகாக்க மேல் சொன்ன விஷயங்களில் உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றலாம். எதுவுமே செய்ய முடியாதவர்கள் ஒரு சிறிய பாக்கெட் சைஸ் காலண்டர் அட்டையில், கற்பக விநாயகர் படம் இருந்தால் கூட அதை நிலை வாசலில் ஒட்டி வைப்பது வீட்டிற்கு அவ்வளவு நல்லது. எந்த கெடுதலும் உங்கள் வீட்டிற்குள் நுழையாது என்ற இந்த தகவலோடு இந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -