- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க பரிகாரம்

பண வரவு அதிகரிக்க பரிகாரம்

- Advertisement -

நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நாம் பெற வேண்டும் என்றால் அதற்கு பணம் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. எப்பேர்பட்ட சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்கும் எந்த வித இக்கட்டான சூழ்நிலை வராமல் இருப்பதற்கும் நம்மிடம் பணம் என்பது கண்டிப்பாக வேண்டும். பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற சூழ்நிலையில் தான் இன்றைய காலகட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை அதிக அளவில் சேர்ப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த ரெண்டு பொருளை மூட்டை கட்டி வைங்க பணம் சேர

ஒருவருக்கு பணவரவு ஏற்படுகிறது என்றால் அவருக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் இருக்கிறது என்று அர்த்தம். அதே போல் அதிக அளவில் பணம் சேர்ந்து கொண்டு இருக்கிறது என்றால் அவருக்கு குருபகவானின் அருள் இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட மகாலட்சுமி மற்றும் குருபகவானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு அவர்களுக்குரிய எந்த பொருட்களை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். நல்ல நேரம் பார்த்து செய்து கொள்ளுங்கள். அன்றைய தினம் யார் இந்த பரிகாரத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவிற்கு வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய் வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று பொருட்கள் வேண்டும்.

இந்த மூன்று பொருட்களும் கண்டிப்பாக அனைவரின் சமையலறைகளிலும் இருக்கும். அவை தான் பச்சரிசி, துவரம் பருப்பு, வெள்ளை கொண்டை கடலை. இதை ஒன்றாக சேர்த்து வைப்பதற்கு மஞ்சள் அல்லது பச்சை நிற துணி ஒன்று வேண்டும். முதலில் ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, ஒரு கைப்பிடி அளவு வெள்ளை கொண்டை கடலை, ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு எடுத்து அதை வீட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாரிடம் பண வரவு அதிகரிக்க வேண்டும் பணவரவு அதிகரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு நாம் வாங்கி வைத்திருக்கும் மஞ்சள் அல்லது பச்சை துணியை எடுத்து அதில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து மூட்டையாக கட்டி எந்த இடத்தில் பணம் சேகரித்து வைக்கின்றோமோ அந்த இடத்தில் கொண்டு போய் வைத்து விட வேண்டும்.

வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுடைய கல்லாப்பெட்டியில் இந்த மூட்டையை வைத்து விட வேண்டும். இந்த மூட்டைக்கு தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமை தூபம் காட்ட வேண்டும். 48 நாட்களுக்கு ஒரு முறை இதில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது பறவைகளுக்கோ தானமாக கொடுத்துவிட்டு புதிதாக வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ சாபம் நீங்கி வசியம் ஏற்பட பரிகாரம்

இந்த முறையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது இந்த பரிகாரத்தின் பலனால் நம்முடைய பணவரவை அதிகரிப்பதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடைந்து பல மடங்கு பணவரவு அதிகரிக்கும்.இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இதை செய்து பலனடையலாம்.

சற்று முன்