உங்க வீட்டு நில வாசல் படியில், இந்த பிரச்சனை இருக்குதா? ஒரு முறை செக் பண்ணிக்கோங்க! உங்க வீட்டிற்குள் நல்லதை நுழைய விடாமல் தடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

nila-vasal1

நம்ம வீட்டு நில வாசப்படியில் தான் நம்முடைய குலதெய்வமும் மகாலட்சுமியும் நல்ல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இருப்பினும் நாம் செய்யக்கூடிய சில தவறுகளின் காரணமாக அந்த இடத்தில் நல்ல தேவதைகள் வாசம் செய்ய முடியாமல் போய்விடுகின்றது. நம்மில் நிறைய பேர் வீட்டில் நடக்கக்கூடிய அந்த தவறு என்ன. அதை எப்படி திருத்திக் கொள்ளலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nila-vasal

நிறைய பேர் வீடுகளில் வாசல் கதவை திறந்து வைத்திருப்பார்கள். நிறைய பேர் வீடுகளில் அந்த கதவு மூடியே இருக்கும். பொதுவாகவே திறந்த வாசல் கதவு காற்றின் தடாலென அடிக்கக் கூடாது. கோபம் வந்தாலும் வாசல் கதவை டமால் என்று சாத்த கூடாது. இது வீட்டிற்கு தரித்திரத்தை தேடித்தரும். கதவு அதிரும்படி சாத்தப்பட்டால், அந்த நில வாசப்படியில் இருக்கக்கூடிய நல்ல தேவைகள் அந்த இடத்தில் வாசம் செய்ய மாட்டார்கள். எங்க வீட்ல வாசல் கதவை நாங்க தெய்வமாக மதிக்கிறோம். ஆனாலும் கஷ்டம் இருக்கு. என்ன தவறாக இருக்கும்?

வாசல் கதவு சிலபேரது வீட்டில் லேசாக ஆடிக்கொண்டு இருக்கும். முடிந்தவரை வாசல் கதவைத் திறந்து வைக்கும் போது, காற்றில் ஆடாமல் இருக்க, டோர் லாக் போட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு நாற்காலியையோ அல்லது வேறு ஏதாவது பொருட்களையோ அந்த வாசல் கதவு ஆடாத படி, கதவைத் திறந்து வைக்க வேண்டும். (புரிகிறதா! வாசல் கதவு காற்றில் அடிக்காது. ஆனால் நின்றபடியே லேசாக ஒரு இஞ்ச் அளவு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆடும்.) இப்படி கதவு ஆடிக் கொண்டே இருந்தாலும் தவறு தான்.

vasal-kathavu

சிலபேர் வாசல் கதவு ஆடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நிலவாச படிக்கும் கதவுக்கும் நடுவில் கருங்கல், செங்கல் எல்லாம் கொண்டுவந்து வைப்பார்கள். இப்படி செய்யவே கூடாது. இது அந்த இடத்தில் இருக்கக் கூடிய லக்ஷ்மியை அவமானப்படுத்துவதற்க்கு சமம்.

- Advertisement -

வாசல் கதவு, தாழ்பாளும் என்னேரமும் ஆடிக்கொண்டே இருக்கக் கூடிய சூழ்நிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களுடைய குடும்பமும் ஆட்டம் கண்டு விடும் என்பதை மனதில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவோ செலவு செய்கின்றோம். பழுதடைந்த வாசல் கதவை சரி செய்ய எவ்வளவு ஆகப்போகின்றது.

door-vasal-lakshmi

வாசல் கதவை எப்போதும் போல புதுசு போல வைத்துக் கொண்டால் உங்க குடும்பமும் எப்பவும் சந்தோஷமா இருக்கும். இது ஜன்னல் கதவுகளுக்கும் பொருந்தும். ஜன்னல் கதவுகளையும் ஆடாமல் காற்றில் படபடவென அடிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. கவனத்தோடு இந்த சின்ன சின்ன விஷயத்தில் மாற்றத்தை கொண்டு வந்து பாருங்க நிச்சயமா பிரச்சினைகள் தீர ஒரு வழி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
அன்ன தோஷம் ஏற்படுவதற்கு சாப்பாட்டில் நாம் செய்யும் இந்த ஒரு தவறும் காரணமாம்! தவறியும் இனி இந்த தவறை செய்து விடாதீர்கள், வறுமை வந்து சேரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.