உங்க நில வாசப்படியில் இந்தப் பொருளை இப்படி வைத்தீர்கள் என்றால், உங்க வீட்டு வாசலுக்குல் எந்தப் பிரச்சனையும் நுழையவே முடியாது.

door-thirusti

நம்முடைய வீட்டிற்குள் கண்ணுக்கு தெரியாத எந்த ஒரு கண் திருஷ்டியாக இருந்தாலும், கெட்ட சக்தியாக இருந்தாலும், நுழையாமல் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம். வீட்டுக்குள்ள நுழையரவங்களோட கெட்ட எண்ணம் வாசலிலேயே நிற்க வேண்டும் என்பதற்காக, நாம் பல பரிகாரங்களை செய்திருந்தாலும், எல்லாவற்றையும்விட ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. இப்படி செய்யும் பட்சத்தில் நம் வீட்டின் கடன்தொல்லை அதிகரிக்காது. வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்பில்லை. சுப காரிய தடை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

lemon

இதற்கு தேவை 2 எலுமிச்சை பழங்கள் தான். 2 எலுமிச்சை பழங்களையும், நான்கு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். நான்கு துண்டுகளாக வெட்டக்கூடாது. 4 பாகங்களாக இருக்கும் எலுமிச்சை பழத்தின் உள்பக்கத்தில் உப்பை முழுமையாக நிரப்பி விடுங்கள். அதன் உள்ளே 2 மிளகு போட்டு விடுங்கள். எலுமிச்சை பழத்தின் நான்கு வெளி பாகத்திலும் மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து விட வேண்டும். மேல்பகுதியில் ஒரு மஞ்சள் குங்கும பொட்டு. மொத்தம் 5 பொட்டுகள்.

வாசற்படியின் மேல் வைக்கக்கூடாது. வாசற்படிக்கு உள்ளேயும் வைக்கக்கூடாது. நில வாசப்படிக்கு  வெளிப்பக்கத்தில்தான் வைக்க வேண்டாம். அந்த எலுமிச்சை பழத்தையும் தரையில் வைக்க வேண்டாம்.சிறிய தட்டின் மீது வைத்து விடுங்கள். வாசல் படியின், இரண்டு பக்கமும் இரண்டு எலுமிச்சை பழங்கள்.

lemon1

இதை வெள்ளிக்கிழமை அன்று காலை செய்ய வேண்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை அன்று அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து, கால் படாத இடத்திலோ அல்லது ஓடும் தண்ணீரில் போட்டு விடலாம். மீண்டும் வெள்ளிக்கிழமை இதேபோல் எலுமிச்சை பழத்தை தயார்செய்து, வீட்டு வாசலில் பாதுகாப்பிற்காக வைத்து விட்டாலே போதும். நம்முடைய வீடு மிகவும் பாதுகாப்பாக இருப்பதை நம்மால் மன ரீதியாக உணர முடியும்.

- Advertisement -

இதேபோல் எலுமிச்சை பழத்தை நான்கு பாகங்களாக பிரித்து, உள்ளே உப்பு வைத்து, நான்கு மிளகையும் வைத்து, உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போடலாம். சாப்பிடாத குழந்தைகள், தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகள், அடிக்கடி காய்ச்சல் வரக்கூடிய குழந்தைகள், சில குழந்தைகளுக்கு பயத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

salt-and-lemon

இப்படிப்பட்ட சமயங்களில் எல்லாம் இந்த முறையில் எலுமிச்சை பழத்தை தயார் செய்து தலையை சுற்றி வலது பக்கமாக மூன்று முறை, இடது பக்கமாக மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை, சுற்றி கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டு விட்டால் கண் திருஷ்டி மூலம் இருக்கும் பாதிப்புகள் முழுமையாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
சனிக்கிழமையில் பைரவருக்கு இத மட்டும் பண்ணுங்க! எந்த துன்பமும் உங்க பக்கத்துல கூட வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti pariharam in Tamil. Nilai vasal vastu. Nilai vasal pooja. Kan thirusti lemon. Kan thirusti poga Tamil.