உங்கள் குடும்பத்தில் ஒரு காரியம் கூட உருப்படியாக நடக்கவில்லையா? நிலை வாசலில் இந்த ஒரு பொருளை மட்டும் இப்படி வையுங்கள் போதும். ஒவ்வொரு நல்ல காரியமாக வரிசை கட்டி நடக்க தொடங்கும்.

- Advertisement -

சில வீடுகளில் ஒரு நல்ல காரியத்தை கூட நல்லபடியாக நடத்தி முடிக்கவே முடியாது. வீட்டில் சுப விசேஷங்கள் நல்ல காரியங்களை தொடங்குவார்கள். ஆனால் அது பாதியிலேயே ஏதாவது ஒரு பிரச்சனையின் மூலம் தடைபட்டு நிற்கும். சந்தோஷமாக விசேஷங்களை கொண்டாடலாம் என்று, பண்டிகை நாட்களை கொண்டாட காத்திருப்பார்கள். ஆனால் அந்த பண்டிகையை கூட சரியான முறையில் கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நல்ல வேலை கிடைக்கும். ஆனால் அந்த வேலையில் நிரந்தரமாக இருக்க முடியாத சூழ்நிலை. ஒட்டுமொத்தமாக சந்தோஷம் வரும். ஆனால், அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. சந்தோஷம் வந்த வழியிலேயே, பாதியிலேயே திரும்பி சென்றுவிடும். வீட்டிற்குள் நுழையாது. வீட்டிற்குள் சந்தோஷம் நிரந்தரமாக தங்காது.

uppu

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் கண்டிப்பாக ஏதோ ஒருவகையில் அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும், பொறாமை குணமும், காரணமாக இருக்கும். அடுத்தபடி நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளும் ஒரு காரணம்தான். ஒட்டுமொத்தமாக இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்றால் நிலை வாசலில் சக்தி வாய்ந்த ஒரு பொருளை கட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -

எல்லா எதிர்மறை ஆற்றலையும் விரட்டியடிக்க கூடிய சக்தி கொண்ட பொருள் என்றால் அது கல்லுப்பு தான். இந்த உப்பை நிலை வாசலில் வைக்கும் போது நிச்சயமாக நம் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ஒரு சிறிய துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியில் 1 ஸ்பூன் அளவு கல் உப்பையும், 1 சிட்டிகை மஞ்சள் பொடியையும் சேர்த்து கலந்து, முடிச்சாக கட்டி நிலை வாசலில் தொங்கவிட வேண்டும். நிலை வாசலுக்கு வெளிப்பக்கமாக கட்டி தொங்க விடுங்கள். குலதெய்வத்தை முழுமனதோடு வேண்டி உங்கள் வீட்டிற்குள் கெட்டது எதுவும் நுழையக்கூடாது என்று சொல்லி இந்த முடிச்சை கட்டவேண்டும்.

குறிப்பாக உங்கள் வீட்டு நிலைவாசல் கிழக்கு திசையை பார்த்தவாறு இருந்தால் சிவப்புத் துணியில் இந்த முடிச்சை தயார் செய்ய வேண்டும். உங்களுடைய வீடு வடக்கு பார்த்த வாசல் ஆக இருந்தால் பச்சை துணியில் இந்த முடிச்சை தயார் செய்து மாட்டவேண்டும். உங்களுடைய நிலைவாசல் மேற்கு பார்த்த நிலைவாசல் ஆக இருந்தால் நீல நிறத்தில் இந்த துணி இருக்க வேண்டும். தெற்கு பார்த்த நிலைவாசல் என்றால் கோல்டன் கலரில் இருக்கும் துணியில் இந்த முடிச்சை தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஏதோ ஒரு வண்ணத்தில் இருக்கக்கூடிய துணியில் உப்பை முடிந்து வைப்பதை விட, உங்களுடைய வீட்டு வாசலின் திசைக்கு ஏற்ப, அதற்கு தகுந்த நிறத்தில் இப்படி உப்பை முடிந்து உங்கள் நிலை வாசலில் கட்டி வைத்து பாருங்கள். நிச்சயமாக மகிழ்ச்சி உங்கள் நிலை வாசலைத் தாண்டி வீட்டிற்கு உள்ளே வரும். அந்த மகிழ்ச்சி உங்களுடைய வீட்டில் நிலைத்து நிற்கும்.

kula dheivam

இந்த உப்பை மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். சிலசமயம் மழைக் காலமாக இருக்கும் போது உப்பு கரைந்து அதிலிருந்து நீர் சொட்டு ஆரம்பித்துவிடும் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அப்படி நீர் சூட்டினால் பழைய உப்பை எடுத்துவிட்டு, உப்பை புதியதாக மாற்றிக்கொள்ளலாம். பழைய உப்பை தண்ணீரில் கொட்டி விட்டு, அந்த துணியை துவைத்து விட்டு மீண்டும் புது உப்பு வைத்து குலதெய்வத்தை வேண்டி இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டி வைத்துக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -