- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டின் நிலை வாசல் இப்படி இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து, தரித்திரம் தாண்டவம் ஆடும்....

வீட்டின் நிலை வாசல் இப்படி இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து, தரித்திரம் தாண்டவம் ஆடும். உங்கள் நிலைவாசல் இது போல இருந்தால் உடனே அதை சரி செய்து விடுங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டின் பிரதான வாயிலாக இருப்பது அந்த வீட்டில் நிலை வாசல் தான். அந்த நிலைவாசலில் தான் நம் வீட்டு குலதெய்வமே குடி கொண்டிருக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படி சிறப்புமிக்க இந்த நிலை வாசலில் இந்த சின்ன சின்ன தவறுகள் நடப்பதால் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து தரித்திரம் தாண்டவம் ஆடும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த வில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வீட்டின் நிலை வாசல் என்பது அந்த வீட்டில் குலதெய்வம் முதல் நிலை வாசல் தேவதை வரை வாசம் செய்யும் இடம். மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் வந்து வாசம் செய்வதற்கு அனுமதியே இந்த குலதெய்வமும் நிலை வாசல் தேவதையும் தான் தர வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இப்படியான நிலை வாசலில் இந்த சின்ன சின்ன தவறுகள் நடப்பதால் வீட்டில் தரித்திரம் நிறைந்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

நிலை வாசலில் செய்யக்கூடாத தவறுகள்:
முதலில் வீட்டில் நிலை வாசலானது வீட்டில் மற்ற இடங்களில் இருக்கும் கதவுகளை விட பெரியதாகவும் அதே நேரத்தில் கொஞ்சம் வேலைப்பாடுகள் அதிகமானதாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நிலை வாசலை ராஜவாசல் என்றும் சொல்வார்கள். அப்படியான வாசல் மற்ற வாசலை விட ஒரு படி அதிக முக்கியத்துவத்துடன் தான் இருக்க வேண்டும்.

அதே போல் சில வீடுகளில் வாசல் கதவை திறக்கும் போது அது சத்தம் கேட்கும். அது மட்டும் இன்றி தாழ்ப்பாளை ஆட்டுவது போன்றவை எல்லாம் இருக்கக் கூடாது. இந்த சத்தங்கள் நிறைவாசல் தேவதைக்கு ஆகாது என்று இதனால் வீட்டில் சண்டை வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் வீட்டில் தாழ்பாளை எப்போதும் ஆட்ட கூடாது என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

அடுத்ததாக நம் வீட்டில் நிலை வாசல் நேராக மரங்களோ, மின்சார கம்பிகளோ, இரும்பு கம்பிகள் போன்றவை இருக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நம் வீட்டிற்கு வர கூடிய நல்ல ஆற்றல்கள் தடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலை வாசலில் எப்போதும் மஞ்சள் குங்குமம் வைத்திருக்க வேண்டும். வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வாசலில் இருபுறம் பூ வைத்து ஊதுபத்தி காட்டி வணங்க வேண்டும். இது குடும்பத்தை நல்ல சுபிட்சமாக வைத்திருக்க நாம் செய்யும் முதல் காரியமாகும்.

- Advertisement -

அடுத்து இப்பொழுதெல்லாம் நிலை வாசலை அழகாக வைத்துக் இருக்கிறேன் என்ற பெயரில் நிலைவாசல் கதவுகளில் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கி வைக்கிறார்கள். தெய்வங்கள் நம் வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டியவர்கள். அவர்களை நிலை வாசல் கதவில் வைத்து போவோர் வருவதெல்லாம் கதவை திறந்து மூடும் போது தெய்வங்களையே நாம் ஆட்டி வைப்பது போன்றது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அதி தீவிரமான பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் இந்த 3 விளக்கை ஏற்றினால் போதும். முடிவில்லாமல் தொடரும் பிரச்சனைக்கு கூட, அந்த அம்பாள் முற்றுப்புள்ளி வைத்து விடுவாள்.

அதே போல் நிலை வாசலின் கதவு ஆனது உள்புறம் திறக்கும் படி வைக்க வேண்டும். வெளிப்புறமாக கதவு திறக்கும் படி வைக்க கூடாது. அது மட்டும் இன்றி இந்த நிலை வாசல் கதவில் மாலை மாட்டுவதற்கும் பூக்கள் வைக்கவும் ஆணி அடிப்பது போன்றவை எல்லாம் செய்யக் கூடாது. இவையெல்லாம் நம் வீட்டிற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும்.

சற்று முன்