தினமும் நிலை வாசலின் இரண்டு பக்கத்திலும் இந்த தண்ணீரை தெளித்து வந்தாலே போதும். நல்ல தேவதைகள் நிலை வாசலில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

nilavasal
- Advertisement -

ஒரு வீட்டில் வாழ்பவர்களுடைய தலையெழுத்தை நிர்ணயிப்பது, இந்த தலைவாசல் தான். நம் வீட்டிற்குள் வரக்கூடிய நல்லது கெட்டது எல்லாமே இந்த வாசலின் வழியாகத்தான் உள்ளே நுழைய வேண்டும். தலை வாசலில் அமர்ந்திருக்கும் கெட்ட தேவதைகளை விரட்டி அடிக்கவும், நல்ல தேவதைகளை தலை வாசல்படியில் நிரந்தரமாக அமர வைக்கவும் தாந்திரீக ரீதியாக நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் வீட்டு தலைவாசலை எந்த அளவிற்கு நாம் மதிப்பும் மரியாதையும் பக்தியுடனும் பார்த்துக் கொள்கின்றோமோ, அந்த அளவிற்கு நம்முடைய தலைமுறையும் நன்றாக இருக்கும் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

ஒரு பித்தளை சொம்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான பன்னீர் ஊற்றி விடுங்கள். அந்த பன்னீரில் சிறிதளவு சுத்தமான விபூதி, சிறிதளவு வசம்புப் பொடி, சிறிதளவு மஞ்சள் பொடி, இந்த மூன்று பொருட்களையும் கலந்து முந்தைய நாள் இரவே பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பன்னீர் 1/4 கப் அளவு, வசம்பு பொடி 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், விபூதி 2 சிட்டிகை சேர்த்தால் கூட போதுமானது. ஒருநாள் தேவைக்கு மட்டும் இந்த தீர்த்தத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காலை வீட்டில் இருக்கும் பெண்கள் வாசல் கதவை திறந்து எப்போதும் போல நிலை வாசலை கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டு விடுங்கள். அதன் பின்பு நிலை வாசல் படிக்கு அருகில் வந்து நிலை வாசலின் வலது பக்கம் கொஞ்சமாக இந்த தீர்த்தத்தை தெளித்து விட வேண்டும். இடது பக்கம் கொஞ்சமாக இந்த தீர்த்தத்தை தெளிக்கவேண்டும். அதன்பின்பு எப்போதும் போல நீங்கள் வீட்டிற்கு உள்ளே வந்து விடலாம்.

எல்லா நல்ல சக்தியையும் வசியப்படுத்த கூடிய சக்தி வசம்பு பொடிக்கு உண்டு. விபூதியும் மஞ்சளும் நம் நிலை வாசப்படியில் தங்கி இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடித்து விடும். பன்னீர், வாசம் நிறைந்த ஒரு பொருள். அது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் ஆக தினம்தோறும் முந்தைய நாள் இரவு கொஞ்சமாக இந்த தீர்த்தத்தை தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலை நிலைவாசல் படிக்கு இரண்டு பக்கத்திலும் இந்த தண்ணீரை தெளித்து வர வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியாலும் நுழைய முடியாது. அதே சமயம் வீட்டிற்குள் இருக்கும் தெய்வமாக இருந்தாலும் சரி, நிலை வாசலில் வசிக்கும் நல்ல தேவதைகளும் அங்கேயே நிரந்தரமாக தங்கி இருக்கும்.

- Advertisement -

இதேபோல மாதம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் நிச்சயமாக நிலை வாசல் படியை சுத்தம் செய்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து நிலை வாசலுக்கும் கற்பூர ஆராத்தி கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும். வெள்ளிக்கிழமை அல்லாமல் அமாவாசை பௌர்ணமி தினத்திலும் நிலை வாசலுக்கு பூஜை செய்ய மறவாதீர்கள்‌. தொடர்ந்து தலைவாசல் வழிபாட்டை மேற்கொள்ளும் வீடு, தலைமுறை தலைமுறையாக தழைத்தோங்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

சொல்ல முடியாத அளவுக்கு வீட்டில் பிரச்சனை. ஒருவர் கூட மனதில் நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள். வீடு சூனியம் பிடித்தது போல உள்ளது என்று நிறைய பேர் புலம்புவது உண்டு. அப்படிப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தை தொடர்ந்து 48 நாட்கள் நிலை வாசலில் தெளித்து வாருங்கள். நிச்சயமாக வீட்டில் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -