வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ்பவர்கள் ஒரு சில பேர் மட்டும் தான். பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த வாழ்க்கை சந்தோஷத்தை கொடுக்கும் என்பது தவறான கருத்து. பணம் இல்லாமலும் நிறைய பேர் இந்த பூமியில் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படாமல், அடுத்தவர்களிடத்தில் இருக்கும் பொருள் நம்மிடம் இல்லையே என்று ஏக்கப்படாமல், இருப்பதை வைத்து திருப்தி அடைந்து மன மகிழ்ச்சியோடு வாழக்கூடிய வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை.
இந்த வாழ்க்கையில்தான் சந்தோஷமும் நிம்மதியும் நிலைத்து இருக்கும். தேடல் இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும். ஆனால் இதை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு என்றைக்குமே வாழக்கூடாது. இது மட்டுமே வாழ்க்கை என்று குடும்ப சந்தோஷத்தை இழந்து விடக்கூடாது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் வரும் சுக துக்கங்களை ஏற்றுக்கொண்டு இந்த அழகான வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து பாருங்கள். இதை விட வேறு எந்த சந்தோஷமும் இருக்கவே இருக்காது. சிரிக்க தெரிந்த மனித பிறவியில் பிறந்துவிட்டு, தினம் தினம் சிரிக்காமல் இருந்தால் எப்படி.
புன்னகையோடு சேர்த்து, தினமும் நீங்கள் சொல்லக் கூடிய இந்த மந்திர வார்த்தை உங்கள் வாழ்க்கையை இன்னும் அழகாக மாற்றி தரும். தினமும் நம் வாழ்க்கையை அழகாக மாற்றி தரக்கூடிய அந்த ஒரு மந்திர வார்த்தை என்ன அதை எப்படி உச்சரிக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும் மந்திரம்
“நற்பவி நற்பவி நற்பவி” இந்த வார்த்தையை சொல்லும்போது நம் மனதிற்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம் ஏற்படும். துக்க நிலையில் இருக்கும்போது இந்த வார்த்தையை சொன்னால் துக்கங்கள் காணாமல் போகும். நற்பவி என்ற வார்த்தைக்கு அவ்வளவு சிறப்பு வாய்ந்த மகிமை இருக்கிறது. இந்த மந்திரம் நம்மில் பல பேருக்கு தெரியும். நற்பவி என்று சொல்லக்கூடிய இந்த சிவ மந்திரத்தை தனியாக உச்சரிக்காதீர்கள்.
சிறப்பு மந்திரம்
“நற்பவி நற்பவி நற்பவி ஓம்,
ஓம் சக்தி ஓம், சக்தி சிவ சக்தி ஓம்”
இந்த முறையில் நற்பவி மந்திரத்தை சொல்லி பாருங்கள். சிவனும் சக்தியும் சேர்ந்து அருளாசியை கொடுக்க கூடிய மந்திரம் தான் இது. தினம் தினம் இந்த மந்திரத்தை சொல்லலாம். நேரம் காலம் என்று கிடையாது. குளித்துவிட்டு தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது.
எப்போதெல்லாம் இறைவனின் மீது உங்கள் சிந்தனை செல்கிறதோ, அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். எப்போதெல்லாம் வேலையில்லாமல் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் மனதிற்குள் இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். மன அமைதி கிடைப்பதோடு சேர்த்து பெரிய செல்வந்தர்களாக மாறக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு வரும்.
நன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென நொடிந்து போய் இருப்பார்கள். நல்ல வேலையில் இருந்தவர்களுக்கு திடீரென்று வேலை இல்லாமல் போய்விடும். ஆரோக்கியமான வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு திடீரென எதிர்பாராத ஏதாவது உடல் உபாதைகள் வந்துவிடும். இதுபோல எதிர்பாராத மன கஷ்டங்கள் வரும்போது அதை நம்முடைய மனது ஏற்றுக்கொள்ளாது.
இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்
அந்த சமயத்தில் மேல் சொல்லக் கூடிய இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமல் ஒரு தெம்பு நம்மிடத்தில் வரும். வாழ்க்கையை எப்படியோ சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையையும் இந்த மந்திரம் நமக்கு கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த நற்பவி மந்திரம் சமர்ப்பணம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.