வீட்டில் உள்ள பிரச்சனையை நினைத்து, இரவு தூங்காமல் இருக்கும் பெண்கள், இதை செய்துவிட்டு தூங்கச் சென்றால் போதும். கஷ்டங்கள் மறக்கும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

sleep

பொதுவாகவே பல பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருக்கும். நாள் முழுவதும் நடந்த பிரச்சனை, போன வாரம் நடந்த பிரச்சனை, போன மாதம் நடந்த பிரச்சனை என்று, இரவு தூங்கச் செல்லும் போது எதை எதையோ எண்ணிக் கொள்வார்கள். அதை நினைத்து மனம் நொந்து, மன வேதனைப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் இரவு தூக்கம் கெட்டுப் போகும். மறுநாள் காலை அவர்களால் சீக்கிரமாக கண் விழிக்க முடியாது. உடல் சோர்வு ஏற்படும். ஆகையால் மறுநாள் வேலையும் கெட்டுப்போகும். இப்படியாக அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை நினைத்து நினைத்து, அடுத்த நாள் வாழக்கூடிய வாழ்க்கையையும், அடுத்த நாள் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நல்லதையும் அவர்களே கெடுத்துக் கொள்வார்கள்.

sad

இப்படியாக தொடர் கஷ்டங்கள் வருவதற்கு, குறிப்பாக பெண்களுக்கு, அவர்கள் இரவு தூங்காமல் இருப்பதும் ஒரு காரணம் தான். சரி, நடந்த கஷ்டத்தை எல்லாம் மறந்து இரவில் நன்றாக உறங்க ஏதாவது ஒரு சுலபமான வழி உண்டா என்று கேட்கும் பெண்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவுதான் இது.

இரவு உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, உறங்கச் செல்வதற்கு முன், ஒரு 5 நிமிடத்திற்கு முன்பாக கொஞ்சம் குளிர்ந்த நீரில் உங்களுடைய முகம் கை கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு துண்டைக் கொண்டு முகம் கைகால்களை துடைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுடைய கால் பாதங்களுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து, தேய்த்து அழுக்கு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

sad-crying

உங்கள் வீட்டு பூஜை அறையில் அல்லது வரவேற்பறையில், கிழக்கு பார்த்தவாறு அல்லது மேற்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களால் தரையில் அமர்ந்து கொள்ள முடிந்தால் அமர்ந்து கொள்ளலாம். முடியாதவர்கள் நாற்காலியின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கண்களை மூடிக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை மனவேதனையை நினைத்து ‘இதுவும் உங்களை விட்டு கடந்து போகும்.’ இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருப்பது. மற்றபடி எல்லா கஷ்டங்களும், ஒருநாள் நம்மை விட்டு கடந்து போகும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு நாள் விடிவு காலம் பிறக்கும் என்று நினைத்து மனதை அமைதிப்படுத்த வேண்டும். பொழுது விடியும் போது உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும் விடியும் என்று எண்ணி மனதை பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள்.

night-sleep

நடந்தது, நடந்தாகி விட்டது! நடந்ததை மாற்றுவதற்கு யாராலும் முடியாது. ஆனால் மறுநாள் நடக்கப் போவதை, சரியான முறையில் நடத்திச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை அந்த ஆண்டவன் நம் கையில் கொடுத்து இருக்கிறானே! என்று எண்ணி, எல்லா கஷ்டத்தையும், எல்லா பாரத்தையும் ஆண்டவனிடம் இறக்கி வைத்துவிட்டு, மனதை அமைதிப்படுத்திக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். ‘காலையில் எழுந்ததும் நாம் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது’ என்பதை மட்டும் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நிம்மதியான தூக்கம் வரும்.

sleep

இதை செய்து விட்டால் தூக்கம் வந்துவிடுமா? என்றெல்லாம் நினைத்து இதை செய்யக்கூடாது. அந்த ஆண்டவனிடம் நம் பாரத்தை இறக்கி வைத்து விட்டோம், இனி அவன் பார்த்துக்கொள்வான் என்று முழு நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு தூக்கம் வருவது உறுதி. பெண்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமா? இல்லை தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.