- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்த காரியம் வெற்றியடைய சக்கரத்தாழ்வார் வழிபாடு

நினைத்த காரியம் வெற்றியடைய சக்கரத்தாழ்வார் வழிபாடு

- Advertisement -

மகாவிஷ்ணுவுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர் சக்கரத்தாழ்வார் என்று நாம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு பெருமாள் ஆலயத்திலும் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனியாக ஒரு சன்னதி கண்டிப்பாக முறையில் இருக்கும். அதே சமயம் சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமாக நரசிம்மரும் வீற்றிருப்பார். சக்கரத்தாழ்வாரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் நாம் வழிபாடு செய்யும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் அதிக அளவில் இருக்கும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சக்கரத்தாழ்வார் வழிபாடு

சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும் என்ற எண்ணம் நம் மனதிற்குள் வருவதே மிகப்பெரிய பாக்கியம் ஆகும். அப்படி அந்த எண்ணம் வந்து நாம் சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு அடி எடுத்து வைத்தால் கூட நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக சக்கரத்தாழ்வார் 10 அடிகள் முன்னோக்கி எடுத்து வைத்து நம்மிடம் வருவார் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வாரை பலவிதமான வேண்டுதலுக்காக நாம் வழிபாடு செய்யலாம். எந்தவித ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, அந்த தடைகள் விலகி வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாக சக்கரத்தாழ்வாரை புதன்கிழமையும், சனிக்கிழமையும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. தினமும் கூட சக்கரத்தாழ்வாரை நாம் வழிபாடு செய்யலாம். நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியத்தை அவருக்கு முன்பாக வைத்து அவரை நினைத்து மனதார வழிபாடு செய்வதன் மூலம் சக்கரத்தாழ்வாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சக்கரத்தாழ்வாரின் படத்தை நம்முடைய வீட்டில் வைத்து அனுதினமும் அவருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்குவதோடு பெருமாளின் அருள் கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். நம்முடைய கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று கூறப்படுகிறது.

இதோடு வியாழக்கிழமை அன்று சிவப்பு நிற மலர்களை நம்முடைய கைகளாலேயே மாலையாக தொடுத்து சக்கரத்தாழ்வாருக்கு அணிவிக்க வேண்டும். பிறகு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை அவருக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு பின்வரும் இந்த மந்திரத்தை முழுமனதோடு தங்களால் இயன்ற எண்ணிக்கையில் கூறி சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தால் அந்த வழிபாட்டின் பலனால் நாம் என்ன காரியம் நினைத்தோமோ அந்த காரியத்தில் நமக்கு வெற்றிகள் உண்டாகும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நம”

இதையும் படிக்கலாமே:கடன் நிவர்த்தி அடைய முருகன் வழிபாடு

பல அபரிவிதமான சக்திகள் நிறைந்த சக்கரத்தாழ்வாரை முழுமனதோடு நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் தீர்வதற்குரிய வழிகள் கிடைக்கும் நினைத்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்