- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்ததை நடத்தி காட்டும் சக்தி மந்திரம்

நினைத்ததை நடத்தி காட்டும் சக்தி மந்திரம்

- Advertisement -

நாம் நினைக்கும் காரியம் நினைத்தபடி நடந்தேற வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்சிகளை எடுப்போம். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கு உதவக்கூடிய மந்திரங்கள் பல இருக்கின்றன. அம்மனுக்கு உரிய சக்தி மந்திரமான இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 11 நாட்கள் உச்சரிப்பதன் மூலம் நாம் நினைத்தது நினைத்தபடி நடந்திடும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நினைத்ததை நடத்தி காட்டும் சக்தி மந்திரம்

சாதாரணமாக ஆண் தெய்வ வழிபாட்டை விட பெண் தெய்வ வழிபாடு என்பது விரைவிலேயே பலன் தரக்கூடியதாக திகழ்கிறது. பெண் தெய்வம் என்றாலே கருணை மிகுந்தவளாக கருதப்படுகிறாள். அப்படிப்பட்ட பெண் தெய்வ வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் விரைவிலேயே நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். அந்த வகையில் அம்மனை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை 11 நாட்கள் மட்டும் கூறினால் போதும். நாம் நினைத்தது நினைத்தபடி நடந்தேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த மந்திரத்தை கூற ஆரம்பிக்க வேண்டிய நாட்களாக கருதப்படுவது செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை. மேலும் அம்மனுக்கு மாலை நேரம்தான் உகந்த நேரம் என்பதால் மாலை நேரத்தில்தான் இந்த மந்திர வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை ஆரம்பிப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் ராகு காலத்தில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 11 நாட்களும் நாம் அசைவத்தை தவிர்த்து விட்டு சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய காமாட்சி அம்மனின் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து அம்மனை முழு மனதோடு நினைத்துக்கொண்டு இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறும்பொழுது எந்தவிதமான வேண்டுதலையும் அம்மனிடம் வைக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 11 நாட்கள் நாம் கூறுவதன் மூலம் அம்மனின் அருளை பெற முடியும். அதற்குப் பிறகு எப்பொழுதெல்லாம் நாம் முக்கியமான காரியங்களில் ஈடுபடுகிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த மந்திரத்தை 108 முறை மட்டும் கூறினால் போதும்.

- Advertisement -

அம்மனின் அருளால் அந்த காரியம் நாம் நினைத்தது போல் நினைத்தபடியே நடந்தேறும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் இந்த மந்திரத்தை கூறக்கூடாது என்பதால் அதற்கேற்றார் போல் 11 நாட்களை தேர்வு செய்து இந்த மந்திர வழிபாட்டை தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை கூறும் பொழுது அம்மனுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து கூறுவது என்பது மிகவும் சிறப்பு.

மந்திரம்

“ஓம் காத்யாயநாய வித்மஹே
கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்”

இதையும் படிக்கலாமே:நலம் தரும் நந்தி மந்திரம்

மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன் மந்திரத்தை முழுமனதோடு 11 நாட்கள் கூறி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடப்பதற்கு அம்மனின் அருள் உறுதுணையாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்