வேண்டியது கிடைக்க சனி மகா பிரதோஷ மந்திரம்

sivan lingam
- Advertisement -

சிவனை வழிபடுவதற்கும் அவர் அருளை பெறுவதற்கும் நாம் வழிபட உகந்த நாள் திரியோதசி திதி வரக்கூடிய நாள். இன்று திதி வரக்கூடிய நாளை தான் நாம் பிரதோஷ தினமாக வழிபட்டு வருகிறோம். இது மாதத்தில் இரண்டு முறை வரும் அதை வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என சொல்வார்கள். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வது நம்முடைய பாவங்கள் நீக்கி புண்ணிய பலனை பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.

இந்தப் பிரதோஷமானது அது வரக் கூடிய நாட்களை பொறுத்து அதற்கான பலன்கள் அமையும். திங்கட்கிழமையில் வந்தால் சோமவார பிரதோஷம் வியாழக்கிழமையில் வந்தால் குபேர பிரதோஷம் வெள்ளிக்கிழமையில் வந்தால் சுக்கிர பிரதோஷம் என அந்தந்த நாட்களுக்கு ஏற்றவாறு பிரதோஷத்தின் பலன்கள் மாறுபடும். அந்த வகையில் சனிக்கிழமையில் வரக் கூடிய பிரதோஷம் மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் சனிப்பிரதோஷத்த தினத்தன்று சிவபெருமானை நாம் வழிபட்டால் அது பல வருடங்கள் சிவபெருமானின் விரதம் இருந்து வழிபட்டதற்கான பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் தான் மற்ற அனைத்து பிரதோஷங்களில் விட சனிப்பிரதோஷம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சனிப்பிரதோஷமானது நாளைய தினம் நமக்கு வாய்த்து இருக்கிறது. அருமையான இந்த நாளை தவிர விடாமல் சிவபெருமானை வணங்கி அவர் அருளை பெறலாம். அதற்கான ஒரு எளிய சூட்சம வழிபாட்டு முறையை தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சிவன் அருள் பெற சிவ மந்திரம்

நாளைய தினம் சனி பிரதோஷ நாளில் சிவபெருமானை உண்ணாமல் விரதம் இருந்து வழிபட்டால் பல நல்ல பலனை பெறலாம். இந்த விரதத்தை அவரவர் உடல் நலத்தை பொறுத்து விரதத்தை மேற் கொள்வது நல்லது. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி சிவபுராணத்தை ஒரு முறை படியுங்கள் அல்லது கேளுங்கள்.

இந்த முறை உங்களுடைய அந்த பிரதோஷ வழிபாட்டிற் காண முழு பலனை பெற்றுத் தரும். அத்துடன் அன்றைய நாள் முழுவதும் சிவபெருமானை மனதார நினைத்து அவரின் நாமங்களை ஜெபித்துக் கொண்டே இருங்கள். அதே போல் நாளைய தினத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு ஏதேனும் பொருள் வாங்கி கொடுங்கள் அது உங்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.

- Advertisement -

நாளை மாலை பிரதோஷ வேலையான நான்கு முப்பதிலிருந்து ஆறு மணிக்குள்ளான கால நேரத்தில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்று சிவதரிசனத்தை முதலில் செய்து விடுங்கள் நீங்கள் இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

சிவதரிசனத்தை பார்த்த பிறகு ஆலயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஓம் ஹம் சிவாய நமஹ
என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை செய்த பிறகு சிவபெருமானிடம் உங்கள் தேவை எதுவோ அதை கேளுங்கள் கட்டாயமாக அதை அவர் நிறைவேற்றி தருவார் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டை ஆலயத்தில் சென்று செய்ய முடியாது என்பவர்கள் பிரதோஷ காலத்தில் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து சிவபெருமானின் மனதார வேண்டிக் கொண்டு சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தின் அருளும் சக்தியும் அதிகரிக்க பரிகாரம்

நாளைய தினம் நம்முடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள இறைவன் நமக்கு அளித்த நன்னாள் என்றே சொல்லலாம். அந்த நாளை தவிர விடாமல் சிவபெருமானின் மனதார இப்படி வேண்டி நல்ல பலன்களை பெறுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -