- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க தை வெள்ளி தீப வழிபாடு

நினைத்தது நடக்க தை வெள்ளி தீப வழிபாடு

- Advertisement -

பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சனை, குழந்தைகளால் பிரச்சினை, கணவன் மனைவிக்குள் பிரச்சனை, நிம்மதியின்மை, சொந்த வீடு அமையாமல் வாடகை வீட்டில் இருப்பது, சம்பாதித்த பணம் தேவையில்லாமல் செலவாகுவது, கொடுத்த இடத்தில் இருந்து பணம் வராமல் இருப்பது என்று பலவிதமான பிரச்சனைகள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரச்சனைகள் தீருவற்கு தை மாத வெள்ளிக்கிழமை என்பது மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் மேற் சொன்ன பிரச்சனைகளோடு இன்னும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றும்பொழுது நாம் என்ன மனதில் நினைத்து ஏற்றுகிறோமோ அது அப்படியே நடக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தை வெள்ளி தீப வழிபாடு

தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரிய நாள்தான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக தை வெள்ளி என்பது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாகவும் அதேசமயம் அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபத்தோடு இந்த ஒரு தீபத்தை ஏற்றி நம்முடைய நீண்ட நாள் கோரிக்கையை முன் வைத்தோம் என்றால் அந்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த தீபத்தை தை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரஹோரை என்பது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரும். இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் இந்த தீபத்தை ஏற்றுவதற்கு வாழையிலை, செம்பருத்தி இலை, அரச இலை, வெற்றிலை இவை நான்கில் ஏதாவது ஒரு இலை வேண்டும்.

ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மேல் எந்த இலை கிடைக்கிறதோ அந்த இலையை வைக்க வேண்டும். அந்த இலையின் நடுவில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து வட்டமாக பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அந்த நாணயத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாணயத்தின் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய்யை ஊற்றி தாமரை தண்டு திரியை போட வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த நெய்யில் சிறிது ஜவ்வாது, சிறிது பச்சை கற்பூரம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம். இந்த தீபத்திற்கு முன்பாக பால், பாதாம் பருப்பு, பூசணி விதை போன்றவற்றால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ? நீண்ட நாட்களாக எது நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தீர்களோ? அந்த வேண்டுதலை கோரிக்கையை ஒன்றை மட்டும் முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை தானமாக தர வேண்டும். ஒரே ஒரு வாழைப்பழம் கிடைத்தால் கூட போதும். அதைக்கூட கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பரிபூரணமாக பெறுவதோடு நாம் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த வழிபாட்டை செய்தோமோ அந்த வேண்டுதல் விரைவிலயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வரம் தரும் சங்கு பூ

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு விதமான சூட்சுமங்கள் இருக்கின்றன. அந்த வகையில் சுக்கிரனுக்குரிய இந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருளும் கிடைக்கும், அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். அதன் மூலம் நாம் நினைத்தது விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்