நினைத்தது நடக்க, எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஹனுமனை நினைத்து இந்த பொட்டை நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதும்.

hanuman

நம்முடைய வேண்டுதல் நிறைவேற எடுத்த காரியம் வெற்றி பெற சுலபமான வழிபாட்டு முறைகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனுமனை நினைத்து நாம் தொடங்கும் எந்தக் காரியமும் நிச்சயம் வெற்றி தான். மன உறுதியோடு, இறை நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்களில், பல தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அந்த தடைகளால் நமக்கு நன்மையே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆகையால் எடுத்த காரியத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும் மன உறுதியோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அந்த காரியத்தில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.

hanuman-sivan

சரி, பொதுவாகவே நாம் நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டுமென்றால் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, நெற்றியில் விபூதி குங்குமம் சந்தனம் இப்படி ஏதாவது ஒரு திலகத்தை இட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் ஒரு அதி அற்புதம் வாய்ந்த இரண்டு பொருட்களை சேர்த்து நம் நெற்றியில் இட்டுக்கொண்டால் செல்லும் காரியம் நம் வசமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒன்று சிவப்பு சந்தனம், இரண்டாவது ஹனுமனுக்கு உரிய செந்தூரம். இந்த 2 பொருட்களையும் வாங்கி ஒன்றாகக் கலந்து சிறிய டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் வெளியே கிளம்பும்போது ஆஞ்சநேயரை மனதார வேண்டி இதை நெற்றியில் சிறிய திலகமாக இட்டுக் கொண்டு சென்றால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றிதான்.

sandhanam

அடுத்தப்படியாக நீண்ட நாட்களாக உங்களுடைய நிறைவேறாத வேண்டுதல் ஏதாவது இருந்தால் அதற்கு என்ன செய்யலாம்? மிக மிக சுலபமான பரிகாரம் இது. இதை வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் செய்தால் அதி அற்புதமான பலன்கள் கூடிய விரைவில் கிடைக்கும். உதிரி புஷ்பங்களை வாங்கிக்கொள்ளுங்கள். வாசனை மிகுந்த உதிரி புஷ்பங்களாக இருக்கவேண்டும். மல்லி, முல்லை, ஜாதி மல்லி என்று சொல்லக்கூடிய பூக்களை வாங்கி பெண்கள் தங்களுடைய கையால் தொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பூவையும் எடுத்து அழகாக நெருக்க நெருக்கமாக தொடுக்கும்போது, உங்களுடைய வேண்டுதலை மனதார நினைத்து, அந்த வேண்டுதல் நிறைவேறும் என்ற எண்ணத்தோடு நீங்கள் தொடுத்த பூவை, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அந்த இறைவனுக்கு கொடுத்துவிட வேண்டும். உங்கள் கையால் தொடுத்த அந்த பூ இறைவனை போய் சென்றடையும்.

flower

இது ஒரு பரிகாரம் கூட அல்ல. மன நிறைவோடு இறைவனுக்காக நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டுமுறை. ஆத்மார்த்தமான இந்த வழிபாட்டு முறையை உங்கள் கையாலேயே செய்து வரவேண்டும். தொடர்ந்து உங்களது ஆசைகளை சொல்லி, அந்தப் பூவை கட்டி இறைவனுக்கு கொடுத்து வரும் போது நீங்கள் நினைக்க முடியாத அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ்வதை உணரமுடியும். இதோடு மட்டுமல்லாமல் இறைவனுக்கும் உங்களுக்கும் நேரடியாக தொடர்பு இருப்பது போல ஒரு உணர்வு உங்களுக்குள் வந்து விடும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.