நாளை சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு இந்த வால் வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் கைகூடும்.

- Advertisement -

கேட்டவருக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் தெய்வம் ஆஞ்சநேயர். இவர் எந்த ஒரு தேவ லோக பதவியும் வேண்டாம் என்று கூறி, ராம நாமத்தை ஜெபிக்கும் ஒரு பக்தனாகவே காலம் முழுவதும் இருக்கும் வரத்தை பெற்று, நம்முடனே சதா சர்வ காலமும் இருந்து கொண்டு இருப்பவர். நம்மில் ஒருவராகவே இருக்கும் இவரை நாம் மனதார நினைத்து, இந்த வால் வழிபாடு செய்தால் நம் மனதில் நினைத்த காரியங்களை நிச்சயம் நமக்கு நிறைவேற்றி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வால் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இந்த வால் வழிபாடை நாம் கோவில்களுக்கு சென்று செய்தால் சிறப்பு. ஆனால் இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் அது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. எனவே அவரவர் வீட்டில் இருந்தபடியே இந்த வால் வழிபாடை செய்து கொள்ளலாம். ஆனால் இந்த வழிபாட்டிற்கு ஆஞ்சநேயருடைய திரு உருவப்படம் நமக்கு தேவை. வீட்டில் ஆஞ்சநேயர் படம் வைக்கலாமா என்ற கேள்விகே இடமில்லை நிச்சயமாக ஆஞ்சநேயரின் படம் வீட்டில் வைத்து வணங்கலாம்.

- Advertisement -

சரி இப்போது வால் வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம் இந்த வழிபாடு செய்வதற்கு சனிக்கிழமை மிகவும் உகந்த நாள். ஏனென்றால் ராமர் அதாவது பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த நாள் அவருடைய பக்தனான இவருக்கும் அதே நாளில் இந்த பூஜையை தொடங்குவது மிகவும் உத்தமம்.

சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக நம் வீட்டில் பூஜை அறையில் ஆஞ்சநேயர் படத்தை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவரின் படத்திற்கு துளசி மாலை அணிவித்தால் நல்லது. அப்படி உங்களுக்கு மாலை கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் துளசி இலையாவது படத்தில் வைத்து விடுங்கள். இதன் பிறகு நமக்கு தேவையான இரண்டு பொருள் சந்தனம், குங்குமம் இரண்டு மட்டும் தான். மாலை அணிவித்த பிறகு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அனுமரின் வால் பகுதி தொடங்கும் இடத்தில் சந்தனம் வைத்து அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். அதை வைக்கும் போது கட்டாயமாக ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். மந்திரங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் அவரின் படத்தை துடைக்கும் போதும், சந்தனத்தை குழைக்கும் போதும், துளசி மாலை அணிவிக்கும் போதும் இந்த ஸ்ரீராம ஜெயம் என்ற வார்த்தை நீங்கள் சொல்லிக் கொண்டே இருங்கள். ஒரு நாளைக்கு ஒரு சந்தன பொட்டு மட்டுமே வைக்க வேண்டும். இது போல தொடர்ந்து நாற்பத்தியெட்டு நாட்கள் வைக்க வேண்டும். சனிக்கிழமை தொடங்கி முதல் நாற்பத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாடு செய்து வர வேண்டும்.

ஒவ்வொரு பொட்டு வைக்கும் போதும் ஸ்ரீராம ஜெயம் சொல்லும் போதே நீங்கள் எந்த வேண்டுதலுக்காக இதை செய்கிறீர்கள் என்பதை மனதார அவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பொட்டை வைத்துக் வாருங்கள். படம் சிறியதாக இருந்தால் நாற்பத்தியெட்டு நாட்கள் பொட்டு வைக்கும் அளவிற்கு சின்ன சின்ன பொட்டாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நாற்பத்தியெட்டு நாட்கள் கட்டாயமாக செய்ய வேண்டும்.

- Advertisement -

பெண்களும் இந்த பூஜையை தொடர்ந்து செய்யலாம். உங்களுக்கான அந்த மாதவிடாய் காலங்கள் இதில் கணக்கெடுத்துக் கொள்ளப்படாது. நீங்கள் இந்த பூஜையை நிறுத்தி உங்களுடைய அந்த நாட்கள் முடிந்த பிறகு அதை தொடர்ந்து செய்யலாம் முதலிலிருந்து தொடங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இந்த நாற்பத்தியெட்டு நாளுக்குள் உங்களுடைய எண்ணம் நிச்சயம் ஈரேறி இருக்கும். நாற்பத்தியெட்டுவது நாளின் முடிவில் அவருக்கு வடை மாலை சாற்றி ஸ்ரீராம ஜெயம் என்று எழுதிய மாலையும் சேர்த்து, துளசி மாலையும் போட்டு வெற்றிலை மாலை இப்படி அவருக்கு உகந்தது எது எதுவோ அதை செய்து அவருக்கு இந்த பூஜையை நிறைவு செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் தேய்பிறை பஞ்சமி திதி. இந்த ஒரு பொருளை வாராஹிக்கு நிவேதனமாக வைத்தால், வேண்டியது உடனே நடக்கும். எதிரி தொல்லை ஒழியும்.

நாற்பத்தியெட்டு நாட்கள் செய்து முடிப்பதற்குள்ளாகவே நீங்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயமாக உங்களுக்கு நடந்து இருக்கும். இத்தகைய சக்தி வாய்ந்த ஆஞ்சநேயரின் வால் வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து வாருங்கள் அதற்கான பலனை நிச்சயம் உங்களுக்கு தருவார்.

- Advertisement -