எத்தகைய தடைகளும் நீங்கி தீராத ஆசைகள் நிறைவேற பெருமாளுக்கு உங்கள் வீட்டில் இதை செய்தால் போதுமே!

manjal-perumal

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகளும் இருப்பதில்லை! ஆசைகளும் இருப்பதில்லை. அப்படி இருக்கும் போது நம்முடைய ஆசைகள் எத்தகைய இடர்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவதற்கு இறைவனுடைய அருள் கட்டாயம் வேண்டும். நம்முடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கு பெருமாளை வேண்டி இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்து வைத்தால் கூட போதும்! எத்தகைய ஆசைகளும் தடையின்றி நிறைவேறும். அப்படி நாம் செய்ய வேண்டிய பரிகாரம் தான் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

perumal

உங்களுக்கு இருக்கும் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஒரு பேப்பரில் எழுதி கோவில் மரத்தில் கட்டி விட்டால் போதும்! இறைவனுடைய திருவடிகளை அது சேர்ந்து விடும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அது போல வீட்டில் பெருமாளுக்கு இந்த பரிகாரத்தை செய்து வைத்தால் நீண்ட நாள் ஆசைகள் உடனே நிறைவேறும்.

ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் துணி இல்லாதவர்கள் வெள்ளை துணியை மஞ்சளில் தோய்த்து உலர விட்டு சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். அதனை ஒரு தாம்பூலத்தில் விரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். சனிக்கிழமைகளில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். பொதுவாக ஆன்மீகத்தில் ஒரு ரூபாய் நாணயத்திற்கு அதிக மகத்துவம் உண்டு. ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து செய்யக் கூடிய பரிகாரங்கள், வைக்கக்கூடிய காணிக்கைகள், நம்முடைய கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் என்பது நியதி. எனவே நவக்கிரகங்களுக்கு ஏற்ப 9 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து மஞ்சள் துணியில் வையுங்கள்.

one rupee

அதன் பின்னர் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் மற்றும் மங்கலப் பொருளாக இருக்கும் விரலி மஞ்சள் எனப்படும் கொம்பு மஞ்சளை வையுங்கள். அதனுடன் சேர்த்து குறித்த நேரத்தில் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி இருக்கும் கொட்டைப் பாக்கை ஒன்றே ஒன்று வையுங்கள். கொட்டை பாக்கு சாதாரண விஷயமல்ல. கொட்டை பாக்கு வைத்தால் நம் வேண்டுதல் உடனே பலிக்கும்.

இந்த மூன்று பொருட்களையும் மஞ்சள் துணியில் வைத்து பெருமாளுக்கு அலங்காரங்கள் செய்து பின்னர் பூஜைக்கு அனைத்தையும் தயாரிக்க வேண்டும். இந்த பரிகார பூஜை செய்வதற்கு துளசி மாலை தேவை. துளசி இலைகளைக் கொண்டு செய்யப்பட்ட மாலை ஒன்றை பெருமாள் படத்துக்கு போடுங்கள். பூஜையில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி குத்து விளக்கு ஏற்ற வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கை விட குத்து விளக்கு ஏற்றுவதே இந்த பரிகாரத்திற்க்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

manjal-mudichu

பெருமாளுக்கு இருபுறமும் குத்து விளக்கை வைத்து அதில் பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றுங்கள். பின்னர் தூப, தீப, ஆராதனையை காண்பித்துக் கொள்ள வேண்டும். பூஜை நிறைவுக்கு வந்த உடன் மஞ்சள் துணியை அப்படியே மூட்டையாக கட்டி வைத்து கொள்ள வேண்டும். இதனை பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பு ஒரு ஓரமாக வைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு எப்போது முடிகிறதோ! அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அங்குள்ள இறைவன் சந்நிதியில் உங்கள் காணிக்கையைச் செலுத்தி விட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் எல்லாம் வெளியேறி லக்ஷ்மி கடாட்சம் பெறும். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்.