உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை

Love kavithai

நீ தந்த காதல் பரிசுகள் எல்லாம்
இன்று உன் நினைவு சின்னங்களாய்
தூங்குகிறது..
பூட்டிய என் வீட்டு அலமாரியில்..

Kadhal Kavithai Image
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
என்னை அறியாமல் உன் நினைவு – காதல் கவிதை

காதலிக்கும் சமயங்களில் காதலனும் காதலியும் மாறி மாறி பல பொருட்களை வாங்கி தருவது வழக்கம். அதிலும் குறிப்பாக பிறந்த நாள், காதலர் தினம் போன்ற விசேஷ நாட்களில் அதிகப்படியான விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப்பாக தருவார்கள். அந்த பொருட்கள் அனைத்தையும் காதலர்கள் பத்திரமாக வைத்துக்கொள்வார்கள். கிரீட்டிங் கார்டில் தொடங்கி பல பொருட்கள் இதில் ஒரு கலவையாக இருக்கும்.

சிலர் காதலி உண்ட சாக்லேட் பேப்பரை கூட பொக்கிஷமாக சேமித்து வைப்பது வழக்கம். ஒருவேளை அவர்கள் செய்யும் காதல் தோல்வியில் முடிவடைந்தால் இந்த பொருட்கள் அனைத்தும் அவர்களுக்கு ஆறுதலையும் தரும் ஆதங்கத்தையும் தரும். சிலர் இந்த பொருட்கள் அனைத்தையும் தன் காதலனிடமோ அல்லது காதலியிடமோ கொடுத்து விடுவார்கள். இன்னும் சிலர் அதை அழித்து விடுவார்கள். ஒரு சிலர் அதை இறுதி வரை பொக்கிஷமாக பாதுகாப்பார்கள்.

Love Kavithai Image
Love Kavithai

அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.