இரவு தூங்கும் போது இந்தப் பொருட்களை உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். தூங்கி எழுந்த பின்பு நிறைய நல்லதும் நடக்கும்.

sleepless
- Advertisement -

ஒவ்வொரு நாள் இரவு உறக்கமும் நம்முடைய மரணத்திற்கு சமம் என்று சொல்லுவார்கள். அதனால் தான் தூங்கி எழுந்தவுடன் குளிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருக்கின்றோம். இப்படிப்பட்ட உறக்கத்தில் நிறைய பேருக்கு மன நிம்மதி இருக்கிறது. நிறைய பேர் மனநிம்மதி இல்லாமலேயே தூங்குகிறார்கள். தூங்கும் போது மன அமைதியைப் பெற, தூங்கி எழுந்த பின்பு சுறுசுறுப்பாக வேலை செய்ய தலையணைக்கு அடியில் நாம் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கலாம் என்பதை பற்றிய சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். கெட்ட கனவுகள் வராமல் இருக்கவும் இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தூங்கும் போது முதலில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரைத் திறந்தபடி தலைக்கு மேல் பக்கத்தில் வைத்து தூங்குவது மிகவும் நல்லது. நீங்கள் தூங்கி எழுந்த பின்பு, அதாவது காலை விடிந்தவுடன் எழுந்த முதல் வேலையாக இந்த தண்ணீரை கொண்டு போய் ஏதாவது மரம் செடி கொடிகளுக்கு ஊற்றி விடலாம். உங்களுடைய வீட்டில் மரம் செடி கொடிகள் இல்லை என்றால் ஏதாவது மண் பாங்கான இடத்திலும் ஊற்றலாம்.

- Advertisement -

இரவு தலையணைக்கு அடியில் வசம்பை வைத்து தூங்கினால் நல்ல தூக்கம் வரும். இந்த வசம்பின் வாசம் மனதிற்கு ஒரு அமைதியை தரும். கெட்ட கனவு வராது. தூங்கும்போது எந்த ஒரு கெட்ட சக்தியும் நாம் தூக்கத்தை தொந்தரவு செய்யாது. உதாரணத்திற்கு குழந்தைகள் தூங்கும் போது பயப்படாமல் இருக்க, வெளியில் சென்றால் பயப்படாமல் இருக்கவும் கையில் வசம்பு தாயத்து அல்லது வசனமினால் செய்யப்பட்ட வளையல், காப்பு இவைகளை போட்டு வைத்திருப்பார்கள். அதேபோல்தான் நமக்கும் வசம்பு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

தூங்கும் போது நீங்கள் அணியக்கூடிய ஏதாவது தங்கத்தை பத்திரமாக தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம். அப்படி இல்லை என்றால் நாணயங்களை மஞ்சள் துணியில் முடிந்து அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம். ஒரு ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் நாணயம் எந்த நாணயத்தை வேண்டும் என்றாலும் முடிச்சிக்குள் வைக்கலாம். இந்த பொருட்களை எல்லாம் தலையணைக்கடியில் வைத்து தூங்கிய பின்பு லேசாக மஞ்சள் தண்ணீரில் அலம்பி விட்டு மீண்டும் பயன்பாட்டில் புழக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. தங்கம் வெள்ளி நாணயங்களை தலையணக்கு அடியில் வைத்து தூங்கும் போது ஒரு நல்ல வைப்ரேஷன் ஏற்பட்டு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

- Advertisement -

நீங்கள் தூங்கக் கூடிய கட்டிலுக்கு அடியில் முடிந்தால் ஒரு கைப்பிடி வேப்ப இலையை எப்போதும் வைத்துக் கொள்ளலாம். அதை மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூட மாற்றிக் கொள்ளலாம். காய்ந்த வேப்பிலையாகளாக இருந்தாலும் அதற்கு ஒரு ஆற்றல் உண்டு.

அதன் பின்பு ஒரு டம்ளர் தண்ணீரில் பச்சைக் கற்பூரம் அல்லது சாதாரண கற்பூரம் எந்த கற்பூரத்தை வேண்டும் என்றாலும் நன்றாக கலந்து அப்படியே கை படாமல் படுக்கையறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூட இந்த தண்ணீரை மாற்றலாம். இந்த தண்ணீரில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் காற்றில் கலந்திருக்கும் போது நமக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும். மேலே சொன்ன குறிப்புகளின் உங்களுக்கு நம்பிக்கை இருந்தா முயற்சி செய்து பாருங்கள். நிம்மதியான உறக்கம் உங்கள் கண்களை தழுவும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -