- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநிரந்தர வேலை கிடைக்க வீரபத்திரர் வழிபாடு

நிரந்தர வேலை கிடைக்க வீரபத்திரர் வழிபாடு

- Advertisement -

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நம்முடைய பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு உதவக்கூடிய மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது நாம் செய்யக்கூடிய வேலை தான். அப்படிப்பட்ட வேலை நிரந்தரமாக நிலைந்திருக்க வேண்டும் என்றாலும் சரி நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றாலும் சரி வேலையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்க வேண்டும் என்றாலும் வீரபத்திரரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். வீரபத்திரரை எந்த நாளில் எப்படி வழிபாடு செய்தால் வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நிரந்தர வேலை கிடைக்க

சிவபெருமானின் உக்கிர அவதாரங்களுள் ஒன்றாக திகழ்பவர் தான் வீரபத்திரர். இவர் சிவபெருமானின் வேர்வை துளியில் இருந்து உருவானவர் என்று கூறப்படுகிறது. தட்சன் செய்த யாகத்தில் சிவபெருமானுக்கு அவமரியாதை நேர்ந்து விட்டதால் அந்த யாகத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வதம் செய்தவராக தான் வீரபத்திரர் திகழ்கிறார். அப்படிப்பட்ட வீரபத்திரரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது நம்மை ஏலனமாக நினைத்தவர்களும் எதிரியாக நினைப்பவரும் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வீரபத்திரரை வேலை நிமிர்த்தமாக எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

சிவபெருமான் பலதரப்பட்ட அவதாரங்களை எடுத்து இருக்கிறார். அந்த அவதாரங்களில் மிகவும் முக்கியமான ஒரு அவதாரமாக திகழ்பவர்தான் வீரபத்திரர். இவர் காவல் தெய்வமாக பல ஆலயங்களில் வீற்றிருக்கிறார். அப்படிப்பட்ட வீரபத்திரர் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சனிக்கிழமை அன்று சொல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது வீரபத்திரருக்காக ஒற்றைப்படை எண்ணிக்கையில் வெற்றிலையை மாலையாக கட்டி எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

எப்படி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவோமோ அதே போல் வீரபத்திரருக்கும் வெற்றிலைகளை மாலையாக தொடுத்து எடுத்துக்கொண்டு சென்று அவருக்கு சாற்ற வேண்டும். பிறகு அவருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து முழு மனதோடு அவரை வழிபாடு செய்ய வேண்டும். அவருடைய மந்திரம், ஸ்லோகம் தெரியும் பட்சத்தில் அதை கூறலாம். இப்படி சனிக்கிழமை தோறும் நாம் வெற்றிலை மாலை சாற்றி வீரபத்திரரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். முக்கியமாக தற்காலிக வேலை நிரந்தரமாகும். நம்முடைய வேலை தொடர்பான முன்னேற்றத்தில் யாராவது தடைகளாகவோ, தடங்கலாகவோ இருந்தார்கள் என்றால் அவர்கள் விலகிச் செல்வார்கள்.

- Advertisement -

ஒருவேளை வீரபத்திரர் இருக்கும் ஆலயம் வீட்டிற்கு அருகில் இல்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சனிக்கிழமை சென்று வெற்றிலை மாலை சாற்றி வேலை தொடர்பான வேண்டுதலை முன்வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும். இருப்பினும் வீரபத்திரரை வழிபாடு செய்யும்பொழுது அந்த வேண்டுதலுக்குரிய பலனை விரைவில் பெறலாம். வேண்டுதல் நிறைவேறிய பிறகு வீரபத்திரர்க்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தருவது அல்லது அவருக்கு வஸ்திரம் வாங்கித் தருவது போன்றவற்றை மேற்கொள்வது சிறப்பு.

இதையும் படிக்கலாமே: தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வெற்றிலை பாக்கு

முழு மனதோடு வீரபத்திரரை சனிக்கிழமை தோறும் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். நல்ல நிரந்தரமான வேலை கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்