இந்த சுடுகாட்டு செடிக்கு பின்னால் இவ்வளவு விஷயம் ஒளிந்து இருக்கிறதா? அதிர்ஷ்டம் தரும் செடியை பற்றிய அபூர்வ தகவல்கள்!

nithya-kalyani-lakshmi
- Advertisement -

எந்த வகையான செடியாக இருந்தாலும் அது நன்மை, தீமை இரண்டுமே செய்யும் என்பது விதி. எனினும் மனிதனுக்கு தேவையான நல்ல ஆற்றல்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள செடிகள் ஏராளமானவை நம்மிடத்தில் இருக்கின்றன. அவ்வகையான செடிகளில் ஒன்று தான் இந்த ‘நித்திய கல்யாணி’ செடி. நித்திய கல்யாணி செடியில் இருக்கும் பூ முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ மற்றும் ஆன்மீக பயன் தரக் கூடியவையாக உள்ளன. இந்தச் செடி பெரும்பாலும் சுடுகாட்டில் வளரக் கூடியவை ஆகும்.

nithya-kalyani

இறந்த மனித உடலை புதைத்த பின்பு அவர்கள் மேல் இந்த செடியை நட்டு வைப்பது வழக்கம். இதற்கு என்ன காரணம் தெரியுமா? நித்திய கல்யாணி செடி அபூர்வ மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த செடியை வாழும் காலத்தில் மனிதன் பயன்படுத்தி இருந்தால், அவன் தன்னுடைய வாழ் நாட்களை அதிகரித்து இருக்கலாம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே அவ்வாறு சுடுகாட்டில் செய்யப்படுகிறது. அத்தகைய அபூர்வ சக்திகள் வாய்ந்த நித்திய கல்யாணி செடியை வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

நித்திய கல்யாணி செடி கார்பன்-டை-ஆக்ஸைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது. ஆகவே இதனை தாராளமாக நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம். அதிக பராமரிப்பு கூட இந்த செடிக்கு தேவை இல்லை. குட்டையாக வளர்வதால் பால்கனியில் கூட எளிதாக வளர்த்து விட முடியும். அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருப்பவர்கள் இந்த வகையான செடிகளை வளர்த்து வந்தால் உங்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். ஆகவே தான் இதனை மகாலட்சுமிக்கு இணையாக ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

nithya-kalyani1

நித்திய கல்யாணி செடியில் இருந்து தான் இன்று உயிர்கொல்லி நோயாக இருக்கும் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. மருத்துவ உலகத்தில் நித்திய கல்யாணி செடிக்கு தனி இடம் உண்டு. மற்ற வகையான செடிகளை போல் அல்லாமல் 12 மாதங்களும் பூக்களைக் கொடுக்கும் அபூர்வ வகையான நித்திய கல்யாணி செடி எங்கும், எளிதில் வளரக் கூடியவை ஆகும். இதனை தவிர்ப்பதை விட நமக்கு துரதிருஷ்டம் என்பது பெரிதாக வந்து விடப் போவதில்லை.

- Advertisement -

நித்திய கல்யாணி பூவை தெய்வ விக்ரகங்களுக்கு தாராளமாக அர்ச்சனை செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். நித்திய எனும் வார்த்தை தினமும் என்கிற அர்த்தத்தைக் கொடுக்கிறது. கல்யாணி என்பது மங்களத்தை குறிப்பதால், நித்திய கல்யாணி என்பது தினமும் மங்களகரமான விஷயங்களை கொடுக்கக் கூடியது என்றும் பொருள் கொள்ளலாம். மகாலட்சுமி நிரந்தரமாக நம் வீட்டில் வாசம் செய்ய எல்லோருடைய வீட்டிலும் நித்திய கல்யாணி செடியை வளர்ப்பது யோகமாக அமையும்.

nithya-kalyani2

இந்த நித்தியகல்யாணி செடிக்கு வாஸ்து தோஷம் என்பதும் இல்லை. விருச்ச சாஸ்திரத்திலும் நித்திய கல்யாணி செடிக்கு தோஷங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே நித்திய கல்யாணி செடி என்பது தோஷங்கள் அற்றது என்பதால் வீட்டின் எந்த திசையிலும், எந்த இடத்திலும் தாராளமாக வைத்து வளர்க்கலாம். இதனால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்பதை கருத்தில் கொண்டு நித்திய கல்யாணி செடியை சுடுகாட்டு செடி என்று தவிர்த்து விடாமல், வீட்டில் அதிர்ஷ்டமும், பயனும் உண்டாக இதனை வளர்த்து பயன் பெறலாம்.

- Advertisement -