தைப் பொங்கல் நாளன்று செய்யப்படும் பொங்கலில் இந்த ஒரு தவறை செய்யாதீர்கள்! கடவுளுக்கு படைக்கப்படும் நிவேதனங்கள் எப்படி படைக்கக் கூடாது?

pongal-salt

கடவுளுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருட்கள் செய்யும் பொழுதே பக்தியுடன் செய்ய வேண்டும். நாம் என்ன தான் வீட்டில் முண்டியடித்து புளியோதரை, பொங்கல் என்று கிண்டி வைத்தாலும் அது அந்த அளவிற்கு சுவையை நமக்கு தருவதில்லை. ஆனால் கோவிலுக்கு அல்லது பூஜைக்கு என்று செய்தால் மட்டும் அத்தனை ருசி அதில் எப்படி வந்தது? என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இப்படி பூஜைக்கு என்று வைக்கப்படும் நிவேதன பொருட்களில் நாம் இந்த தவறை செய்யவேக் கூடாது. அது என்ன தவறு? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

prasatham

பொதுவாகவே ஒரு இனிப்பு பண்டம் நாம் செய்ய வேண்டுமென்றால் அந்த இனிப்பு பண்டம் மேலும் கூடுதல் சுவை பெற சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்ப்பது நம்முடைய வழக்கம். இப்படி உப்பு சிறிதளவு சேர்ப்பதால் இனிப்பின் சுவைPrasathamprasadam in tamil நமக்கு திகட்ட செய்யாமல் அந்த இனிப்பு பண்டம் கூடுதல் சுவை பெறும்.

ஆனால் இதை பூஜைக்கு என்று செய்யப்படும் நிவேதன பொருட்களில் இப்படி செய்யக் கூடாது. எப்பொழுதும் பூஜைப் பொருட்களில் உப்பு, காரம் சேர்ப்பதை தவிர்ப்பது உத்தமம். பெரும்பாலான தெய்வங்களுக்கு இனிப்பு என்பதில் அலாதியான பிரியம் இருக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது. அந்த இனிப்பு பொருட்களில் இது போல் உப்பு சேர்ப்பது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இந்த தவறை இனி ஒரு போதும் நீங்கள் செய்து விடாதீர்கள்.

prasatham1

கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் தைத் திருநாள் அன்று செய்யப்படும் பொங்கலில் ஒரு சிலர் கல் உப்பு சிட்டிகை அளவில் போடுவார்கள். மகாலட்சுமியின் அம்சமாக இருந்தாலும் பூஜையில் செய்யப்படும் நிவேதன பொருட்களில் உப்பு சேர்க்கக் கூடாது என்பது தான் நியதி. பூஜைப் பொருட்களை எப்பொழுதும் இனிப்பு சரியாக இருக்கிறதா? ருசி எப்படி இருக்கிறது? என்பதை சோதித்து பார்க்கவும் கூடாது. சில வீடுகளில் குழந்தைகள் கேட்கிறார்கள் என்று பூஜைக்கு செய்த பொருட்களை எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள்.

- Advertisement -

பூஜை முடியும் வரை காத்திருப்பதில் தான் உண்மையான பக்தியும் நிரம்பி இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கடவுள் நேரில் வந்து நாம் செய்த நைவேத்தியத்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால் நாம் உண்மையிலேயே கடவுள் பக்தியுடன் அவருக்காக மட்டுமே சமைப்பது தான் ‘நைவேத்தியம்’ என்பதை உணர வேண்டும். அப்படி படைக்கப்படும் நிவேதனப் பொருட்கள் உண்மையில் கடவுளுக்கு சமர்ப்பணம் ஆகிறது.

padaiyal

பூஜை முடியும் வரை பொறுத்திருந்து முதல் பிரசாதமாக நம் முன்னோர்களாகிய காக்கைக்கு உணவு வைத்து விட்டு, காகம் வந்து அதை எடுத்த பின்னர் தான் நாம் அதனை சாப்பிட வேண்டும் என்பது தான் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாயம். இப்படி முன்னோர்களுக்கு முதல் மரியாதை கொடுக்கும் பொழுது அவர்களுடைய ஆசீர்வாதமும் அன்றைய நாளில் நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிடுகிறது. நல்ல நாள், விசேஷம் அன்று பெரியவர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுதல் என்பது எவ்வளவு முக்கியம் என்கிற ஒன்று அனைவரும் அறிந்தது தான்.

sundal

அது போல் நைவேத்தியமாக காரப் பொருட்கள் வைத்தாலும் அதாவது சுண்டல் போன்ற பொருட்களை செய்யும் பொழுதும் அதில் மிளகாய்களை போடுவதை தவிர்ப்பது நல்லது. நாம் வீட்டில் நமக்காக செய்யும் பொழுது எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமே ஒழிய, பூஜைக்கு செய்யப்படும் நைவேத்தியப் பொருட்களில் உப்பு, காரம் தவிர்ப்பது தான் முறையாகும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. நைவேத்திய உணவு எப்போதும், வாழை இலையில் வைத்து படைப்பது தான் நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் திரும்பிய இடமெல்லாம், பார்க்கும் இடமெல்லாம், காலண்டரை மாட்டி தொங்க விட்டு இருக்கீங்களா? நீங்க கட்டாயம் அப்ப இத தெரிஞ்சுக்கணும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.