உங்கள் வீட்டில் திரும்பிய இடமெல்லாம், பார்க்கும் இடமெல்லாம், காலண்டரை மாட்டி தொங்க விட்டு இருக்கீங்களா? நீங்க கட்டாயம் அப்ப இத தெரிஞ்சுக்கணும்.

celander

நிறைய பேருக்கு இந்த பழக்கம் உண்டு. புது வருடம் பிறந்ததும் அடித்துப் பிடித்து, கடையில் இருந்து இலவசமாக கிடைக்கும் காலண்டர்களை, குறிப்பாக தனக்குப் பிடித்த கடவுளின் காலண்டரை வாங்கி வந்து வீடு முழுவதும் மாட்டி தொங்க விடுவார்கள். நமக்கு நல்ல நேரத்தையும், நம்மை கடந்து செல்லும் நாளையும் காட்டக்கூடிய, நாள்காட்டியை பயன்படுத்துவதில் கூட சில முறைகள் உண்டு. உங்களுடைய வீட்டில் சுவாமி படம் போட்ட காலண்டராக இருந்தாலும் சரி, அல்லது வெறும் நாளை மட்டும் காட்டக்கூடிய காலண்டர்களாக இருந்தாலும் சரி, எப்படி மாட்ட வேண்டும். எப்படி மாட்டக் கூடாது. என்பதை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

calendar

முதலில் சுவாமி படங்கள் போட்ட காலண்டரைப் பூஜை அறையில் மாட்டி வைத்து, வீட்டு பூஜை படங்கள் போல் பாவித்து, பூஜை செய்யக்கூடாது. காரணம் காலண்டர்களை நாம் அந்த குறிப்பிட்ட வருடம் முடிந்ததும், எடுத்து வீட்டில் இருந்து அகற்றி விடுகின்றோம். பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பொருட்களை இப்படியாக வருடத்திற்கு ஒரு முறை தூக்கி எறியக்கூடாது.

நம்முடைய வீட்டில் பூஜை அறையில் வைத்த பொருட்கள் பழுது அடைந்தாலும், அதை கொண்டு போய் ஏதாவது ஒரு கோவிலில் மரத்தடியில்தான் வைப்போம் அல்லவா? முடிந்தவரை காகிதத்தில் அட்டையில் இருக்கும் சுவாமி படங்கள் ஒட்டிய காலண்டர்களை பூஜை அறையில் வைப்பதைத் தவிர்த்து கொள்வது நல்லது.

calendar

இதேபோல் வீட்டில் மற்ற இடங்களில் சுவாமி படங்கள் உள்ள காலண்டரையோ அல்லது சாதாரண காலண்டரையோ எல்லா இடங்களிலும் மாட்டி வைக்கக்கூடாது. குறிப்பாக தெற்கு திசையை நோக்கியவாறு உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டர் மாட்டி இருக்கக் கூடாது. வடக்கு சுவற்றில் காலண்டர்களை மாட்டினால் தெற்கு நோக்கியவாறு இருக்கும். தெற்கு பார்த்தவாறு காலண்டரை மாட்டக் கூடாது.

- Advertisement -

இதேபோல் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் காலண்டர்களை மாட்ட கூடாது. கிழக்கு சுவற்றில் மாட்டினால் காலண்டர், மேற்கு பார்த்தவாறு இருக்கும். காலண்டர்களை மேற்கு நோக்கியவாறு மாட்டுவதும் சரியான முறை அல்ல. இது வீட்டில் இருப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கி விடும்.

direction

உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டர் எப்போதுமே வடக்குப் பார்த்தவாறு இருப்பது வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை கொடுக்கும். அதாவது தெற்கு பக்கம் உள்ள சுவற்றில் நீங்கள் காலண்டரை மாட்டி வைத்தால், அது வடக்குப் பார்த்தவாறு இருக்கும் இது சரியான முறை.

celander1

தெற்கு சுவற்றில் உங்களுக்கு காலண்டரை மாற்ற முடியவில்லை என்றால், மேற்கு சுவரில் காலண்டரை மாட்டி வையுங்கள். அப்போது காலண்டர் கிழக்கு பார்த்தவாறு இருக்கும். இதுவும் சரியான முறைதான். உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டர் வடக்குப் பார்த்தவாறு இருக்கலாம். கிழக்கு பார்த்தவாறு இருக்கலாம். இதுதான் வீட்டிற்கு நல்ல அதிர்வலைகளை தேடித்தரும். தவிர எக்காரணத்தைக் கொண்டும் காலண்டர்களை தெற்கு பார்த்த வாறு மாட்டக்கூடாது. மேற்கு பார்த்த வாறு மாட்டக் கூடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
தைத்திருநாள்(14/1/2021) பொங்கல் வைக்க ‘நல்ல நேரம்’ எது? மிக எளிதாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.