- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு தரும் ரிக் வேத மந்திரம்

அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு தரும் ரிக் வேத மந்திரம்

- Advertisement -

பெற்றவர்களாக நீங்கள் இருந்தால், உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்து என்ன தெரியுமா? நீங்கள் பிள்ளைகளாக இருந்தால் உங்களுடைய பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய சொத்து என்ன தெரியுமா? ஆரோக்கியம். ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு உண்மையான சொத்து. நோய் நொடி இல்லாமல் இந்த வாழ்க்கையை வாழ்ந்து விட்டாலே போதும். நாம் செல்வர்கள் தான்.

அந்த வகையில் பார்த்தால் இன்றைய சூழ்நிலையில் தீராத நோய்நொடி பிரச்சனையும் வீட்டில், மருந்து மாத்திரை செலவுதான் அதிகமாக இருக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் இறைவா, என்று இன்றைய மைத்ரேய முகூர்த்த நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்யப் போகின்றோம். அதுவும் பொக்கிஷமான இந்த நோய் தீர்க்கும் ரிக்வேத மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்து பாருங்கள்.

- Advertisement -

உங்களை துரத்தி துரத்தி அடிக்கும் நோய் நொடி பிரச்சனைகள் படிப்படியாக குறையும் என்பது நம்பிக்கை. அதற்காக மருந்து மாத்திரை சாப்பிடுவதெல்லாம் விட்டுவிடக்கூடாது. மருத்துவம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த மந்திரம் உங்களுடைய ஆரோக்கியத்தை கொஞ்சம் மேம்படுத்தும். மருந்து மாத்திரை சாப்பிடுவதை கொஞ்சம் குறைக்கும்.

கர்ம வினைகளால் தான் இந்த பிறவியில் நாம் இவ்வளவு கஷ்டப்படுகின்றோம். போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ, இந்த ஜென்மத்தில் இந்த நோய்நொடி பிரச்சனை என்னை வாட்டி வதைக்கிறது, செய்த பாவத்திற்கு என்னை மன்னித்துவிடு இறைவா, என்று ஒரு முறை சொல்லிவிட்டு, இந்த வழிபாட்டை மேற்கொள்வோம்.

- Advertisement -

அந்த மந்திரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்று அபிஜித் நட்சத்திர நேரம் எப்போது வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா. இன்று 21-4-2025 திங்கட்கிழமை மதியம் 12:25pm – 12:49pm மணி வரை இந்த அபிஜித் நட்சத்திர நேரம் வர விடுவிக்கிறது. இந்த நேரத்தில்தான் நோய் தீர்க்கும் மந்திரத்தை படிக்க வேண்டும்.

இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் என்ன வரம் கேட்டாலும் அது இறைவனிடம் இருந்து நமக்கு கிடைக்கும். அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும், உங்களுக்கு நோய் நொடி பிரச்சனை இருக்கிறது. இப்போது அதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இன்று வரக்கூடிய இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தை நீங்கள் ஆரோக்கியத்தை பெறுவதற்காக வேண்டுதல் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

- Advertisement -

நோய் தீர்க்கும் மந்திரம்

அங்கம நோயாம் அதுவும் எதுவும்
அம்முடி என்று முட்டிதப் பிணியாய்
அண்டம் உடலில் எத்தனை நோயும்

முறிதல், அறுதல், மறைத்தல் காணே !
அத்தள வித்தக அற்புத பீஜம்
அட்சீ தளபதி அருமந்திரமே !

ரிக் வேதம் மந்திரம் இது. சமஸ்கிருதத்தில் தான் இருக்கும். ஆனாலும் இது நமக்கு படிப்பதற்கு எளிமையாக இருக்கும் வகையில், கொஞ்சம் ஏதுவாக சில மாறுதல்களோடு கொடுக்கப்பட்டுள்ளது. அதை தான் இன்று உங்களோடு பகிர்ந்திருக்கின்றோம். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இன்று வரவிருக்கும் அபிஜித் நட்சத்திர நேரத்தில் பூஜையறையில் இரண்டு நெய் விளக்கு ஏற்றி, கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து தீராத நோய்நொடி தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த மந்திரத்தை உங்களால் முடிந்த அளவு படியுங்கள்.

நீங்கள் வெளியிடங்களில் இருக்கிறீர்கள் விளக்கு ஏற்ற முடியாது என்றால், இருந்த இடத்திலிருந்து மனம் உருகப் பிரார்த்தனை செய்து இந்த மந்திரத்தை ஒரு முறை மட்டும் எடுத்து படித்துக் கொள்ளுங்கள் போதும். நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும். இந்த மந்திரத்தை இன்று படித்து வேண்டுதல் வைப்பதன் மூலம் மொத்தமாக இன்றே எல்லா வியாதியும் சரியாகிவிடும் என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் நோயின் தீவிரம் படிப்படியாக குறைவதை உணரலாம்.

இதையும் படிக்கலாமே: மூன்று நாளில் வேண்டுதல் நிறைவேற சுவிட்ச் வேர்ட்

உங்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கோ, குழந்தைகளுக்கும் நீண்ட நாள் வியாதி இருக்கிறது என்றால், இந்த பதிவு உங்களுக்கானது இந்த மந்திரத்தை படித்த பின்பு ஒரு சில நாட்களில், நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்