தீராத நோய்கள் தீர இவற்றை தானம் செய்தால் போதும். நோய் உங்கள் உடலை விட்டு படிப்படியாக குறைந்துவிடும்

dhanam
- Advertisement -

உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு மக்கள் தொடர்ந்து காண்போம் மருத்துவமனையில் வரிசையில் நின்று நோய்களுக்கான மருந்துகளை வாங்குகின்றனர். காலம் மாற மாற மக்கள்தொகை அதிகமானதால், விளைச்சலுக்கான காலத்தைக் குறைத்து அதனை வேகமாக விளைவிப்பதற்காக மருந்து பொருட்கள் சேர்த்து விவசாயம் செய்யப்படுவதால், உணவுப்பொருட்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விஷமாக மாறிவிட்டன. வேறு வழி இல்லாமல் இவற்றை உண்பதால் மனிதனின் உடல் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆட்கொள்ளப்படுகிறது. இப்படி ஒருவர் நோய்வாய்ப்படும் போது சில வேண்டுதல்களையும், தானதர்மங்களையும் செய்வதை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒரு மன திருப்தியையும், நம்பிக்கையையும் கண்டனர். அவ்வாறு இப்படிப்பட்ட நோய்கள் தீர இந்த எளிய பொருட்களை தானமாக கொடுத்தால் மட்டும் போதும். நோய் தாக்குதலில் இருந்து எளிதில் விடுபட முடியும். வாருங்கள் இவற்றை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

medicine

கை, கால் வலி, உடல் சோர்வு இப்படிப்பட்ட பிரச்சனைகள் உடலில் இருந்தது என்றால் முருங்கைக்காயை தானமாக கொடுக்கவேண்டும். தலை சம்பந்தமான பிரச்சனைகள் என்றால் தலைவலி, தலையில் இருக்கும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், கட்டிகள் இவை போன்ற தொல்லைகளுக்காக கலசத்தில் வைக்க பயன்படுத்தப்படும் மட்டைத் தேங்காயை தானமாக கொடுக்க வேண்டும். இந்த மட்டை தேங்காயை ஒன்று மட்டும் தனியாக கொடுக்கக்கூடாது. மூன்று என்ற எண்ணிக்கையில் தான் தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

தொப்புளுக்கு கீழேயும், முழங்காலுக்கு மேலேயும் உள்ள இடுப்பு பகுதியில் ஏதேனும் நோய் பிரச்சனைகள் இருந்தது என்றால் வாழைக்காயை தானமாக கொடுத்து விட நல்ல பலன் கிடைக்கும். தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாழை இலையை தானமாக கொடுக்க வேண்டும். நமது வீட்டில் வாழை இலை இருந்தது என்றால் யாரேனும் அவர்களின் தேவைக்காக வாழை இலை கேட்கும்பொழுது மறுப்பு தெரிவிக்காமல் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வாழையிலையை தானமாக கொடுக்க அதில் ஏதாவது பிரசாதத்தை பரிமாறிக் கொடுக்க வேண்டும்.

valai

ரத்த சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அதாவது இரத்தசோகை, உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது இது போன்ற உடல்நலக் குறைபாடுகளுக்கு மிளகினை தானமாக கொடுக்கலாம். அல்லது கருப்பு உளுந்தை தானமாக கொடுப்பதும் மிகவும் சிறந்ததாக அமைகிறது.

- Advertisement -

இப்படி உணவு பொருட்களை தானமாக வழங்குவதன் மூலம் உடலில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும் என்பது நமது முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் பட்டு கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கையாகும். எனவே தான் அனைத்து கோவில்களிலும் பொங்கல், சுண்டல், புளியோதரை என இது போன்ற உணவுகளை தானமாக வழங்குகின்றனர்.

vegetable1

பொதுவாகவே பச்சையரிசி தானமாக வழங்கி வந்தால் குடும்பம் சுபிட்சம் பெறும். எனவே ஒருவருக்கு தானம் கொடுப்பது என்றால் இது போன்ற உணவு பொருட்களை தானமாக வழங்குவதன் மூலம் உடல்நல ஆரோக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

- Advertisement -