எத்தகைய நோயையும் போக்கும் தன்வந்திரி மந்திரம்

danvantri-compressed

ஒரு மனிதன் நன்கு செயலாற்ற அவனுக்கு நல்ல ஒரு மனநிலை இருக்க வேண்டும். அப்படி நல்ல மனநிலையைப் பெற அவனுக்கு ஆரோக்கியமான உடல்நிலை இருப்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில் பல புதிய வகையான நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன. அப்படி தாக்கும் அந் நோய்க்களுக்கான மருந்துகளை உட்கொண்டாலும் அந்நோய்கள் முழுமையாகவும், விரைவாகவும் நீங்குவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கானது தான் இந்த
“தன்வந்திரி பகவான்” மந்திரம்.

dhanvantari

தன்வந்திரி மந்திரம்:

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

இம்மந்திரத்தின் பொருள்:

“வாசுதேவரே, நோய்களை நீக்கும் அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தி, எல்லா தீமைகளை பொசுக்கும் மஹாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவானை நமஸ்கரிக்கிறேன்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

இம்மந்திரத்தை விஷ்ணு பகவானுக்குரிய புதன், வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களிலோ அல்லது நமது வீட்டில் அவரது படத்திற்கு முன்பு 9 அல்லது 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபித்தால் வெற்றி தேடி வரும்

மேலும் பௌர்ணமி தினத்திற்கு மறுநாளிலிருந்து இம்மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினால், அந்த தேய்பிறை சந்திரனைப்போல் நம் நோய்களும் தேய்ந்து முற்றிலும் நீங்கும் என்பது விதி.