நோய்கள் நீங்க மந்திர விபூதி

sivan vipoothi
- Advertisement -

ஆயிரம் செல்வங்கள் இருந்தாலும் அந்த செல்வங்கள் அனைத்தையும் அனுபவிப்பதற்கு ஆரோக்கியமான உடல் தேவைப்படும். இந்த ஆரோக்கியத்தை பெறுவதற்கு நாம் பல ஆயிரக்கணக்கில் செலவுகளை இன்றளவும் செய்து கொண்டு தான் வருகிறோம். அப்படி செய்தும் நோய்களிலிருந்து நம்மால் விடுபட முடிகிறதா என்று கேட்டால் முற்றிலுமாக இல்லை என்று தான் கூற வேண்டும். மருத்துவர் ரீதியாக ஏதாவது ஒரு நோய்க்காக நாம் மருந்து உண்ணும் பொழுது அந்த மருந்தின் விளைவால் வேறு சில பக்க விளைவுகள் ஏற்பட்டு உடல்நலம் சீர்கெடுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் நீங்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் சிவபெருமானை நினைத்து எப்படி விபூதியை வைத்து வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவபெருமானுக்குரிய விசேஷகரமான பொருளாக கருதப்படுவது தான் விபூதி. திருநீற்றுக்கென்றே ஒரு பதிகம் இருக்கிறது. அந்த பதிகத்தை நாம் திருநீறு பூசும்போது படித்தோம் என்றால் அந்த திருநீற்றின் சக்திகள் பல மடங்காகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட திருநீற்றில் நாம் மந்திரங்களை உச்சரித்து உருவேற்றி உபயோகப்படுத்தும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

முதலில் சிவபெருமானுக்குரிய பழங்கால கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு செல்லும் அன்றைய தினம் பிரதோஷ நாளாக இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். அந்த பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக விபூதியை வாங்கித் தர வேண்டும். பிறகு அபிஷேகத்தை முழுமையாக பார்த்துவிட்டு அபிஷேகம் செய்த விபூதியை வாங்கி வரவேண்டும். இப்படி தொடர்ந்து ஐந்து பிரதோஷங்கள் வேறு வேறு சிவாலயங்களுக்கு அதிலும் குறிப்பாக பழங்காலத்து சிவாலயத்திற்கு சென்று விபூதிகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த விபூதியை ஒரு தட்டில் கொட்டி பரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய மோதிர விரலால் அல்லது ஆள்காட்டி விரலால் விபூதியில் “ஓம்” என்று எழுத வேண்டும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் தர்ப்பைப்புல் கிடைக்கும் அதை வாங்கி வந்து அந்த விபூதியின் மேல் வைத்து விட வேண்டும். நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய தெய்வமாக தன்வந்திரி பகவான் திகழ்கிறார் என்பதால் “ஓம் தன்வந்தியே போற்றி” என்னும் மந்திரத்தை 1008 முறையோ அல்லது 108 முறையோ கூற வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு கூறும் பொழுது நாம் தர்ப்பை புல்லை நம் கையால் எடுத்து விபூதியின் மேல் வைத்த வண்ணம் கூற வேண்டும். தன்வந்திரி மந்திரத்தை கூறிய பிறகு “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரத்தையும் 108 முறையோ 1008 முறையோ கூற வேண்டும். அப்பொழுதும் தர்ப்பை புல்லை எடுத்து விபூதியின் மேல் வைத்து கொள்ள வேண்டும். இப்படி நாம் விபூதிக்கு இந்த மந்திரங்களை கூறி உருவேற்ற வேண்டும். உருவேற்றிய பிறகு ஒரு செம்பால் செய்யப்பட்ட ஒரு டப்பாவை எடுத்து அதில் நாம் உருவேற்றிய இந்த விபூதியை போட்டு அதற்கு மேல் மஞ்சள் துணியை வைத்து கட்டி விட வேண்டும்.

அனுதினமும் இந்த விபூதியை நம்முடைய நெற்றியில் சிறிது தண்ணீரில் குலைத்து பூசிக்கொள்ள வேண்டும். இப்படி பூசும்பொழுது தன்வந்திரி மற்றும் சிவபெருமானின் மந்திரங்களை கூறியவாறு பூச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய நோய்களை தன்வந்திரி பகவானும் சிவபெருமானும் தீர்த்து வைப்பார்கள் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: தை கிருத்திகை முருகன் வழிபாடு

இந்த மந்திர விபூதியை நம்பிக்கையோடு அனுதினமும் நெற்றியில் இட்டு வருபவர்களின் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கும்.

- Advertisement -