தை கிருத்திகை முருகன் வழிபாடு

thai kiruthigai
- Advertisement -

முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமாக திகழக்கூடியது தான் கார்த்திகை நட்சத்திரம். இந்த கார்த்திகை நட்சத்திர நாளன்று நாம் முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்தால் நாம் எந்த வேண்டுதலை நினைத்து வழிபாடு மேற்கொள்கிறோமோ அந்த வேண்டுதல் கண்டிப்பான முறையில் நடைபெறும். அப்படிப்பட்ட கிருத்திகை நட்சத்திரம் மாதா மாதம் வரும். அதிலும் குறிப்பாக கார்த்திகை, ஆடி, தை கிருத்திகைகள் என்பது மிகவும் விசேஷமான கிருத்திகையாக இருக்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தை மாத கிருத்திகை நாளன்று முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

காக்கும் கடவுளாக திகழக்கூடிய முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்தார்கள் என்பதால் தான் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் வந்தது. அவர்களின் நினைவாக தான் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திர நாளன்று நாம் முருகனை நினைத்து வழிபாடு மேற்கொள்கிறோம். கோவில்களில் ஷண்முக அர்ச்சனை என்ற ஒரு அர்ச்சனை இருக்கும். அதில் ஆறு அர்ச்சகர்கள் ஆறு விதமான மலர்களை வைத்து ஆறு விதமான மந்திரங்களை கூறி முருகருக்கு அர்ச்சனை செய்வார்கள்.

- Advertisement -

ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு விதமான மலர்களையும், நெய்வேத்தியங்களையும், மந்திரத்தையும் உச்சரிப்பதாக பொருள்படும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதற்கு மாறாக நாமே நம் வீட்டில் இந்த சண்முக அர்ச்சனையை செய்யலாம். அதுவும் கார்த்திகை நட்சத்திரம் நாளன்று செய்யக்கூடிய இந்த சண்முக அர்ச்சனை மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை நாள் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அன்றைய தினம் முருகப்பெருமானின் படத்தை சுத்தமாக துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு விளக்கேற்றி வைத்து அவருக்கு ஆறு விதமான பிரசாதங்களை நெய்வேத்தியம் செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் என்று ஆறு வகையான உணவுகளை நெய்வேத்தியமாக படைக்கலாம். இப்படி ஆறு வகையான உணவுகளை படைக்க இயலாதவர்கள் சர்க்கரைப் பொங்கலை மட்டும் வைத்தும் வழிபாடு மேற்கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு அர்ச்சனை செய்வதற்காக ஆறு வகையான மலர்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வில்வம், மரிக்கொழுந்து, முல்லை, ரோஜா, தாமரை, செவ்வரளி. இப்படி ஆறு வகையான மலர்களை எடுத்துக்கொண்டு நமக்குத் தெரிந்த முருகனின் மந்திரத்தை கூறி முருகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த மலர்கள் கிடைக்காமல் வேறு மலர்கள் தான் கிடைக்கிறது என்றாலும் பரவாயில்லை. வாசனை நிறைந்த மலர்களாக இருந்தால் போதும்.

ஒவ்வொரு மலர்களிலும் 18 என்ற எண்ணிக்கையில் தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை மட்டுமாவது கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி நாம் ஆறு மலர்களையும் அர்ச்சனை செய்து முடிக்கும் பொழுது 108 முறை அர்ச்சனை செய்து முடித்திருப்போம். கடைசியாக இந்த ஆறு மலர்களையும் கையில் எடுத்து வைத்துக்கொண்டு நாம் எதற்காக இந்த விரதத்தை மேற்கொள்கிறோமோ அந்த வேண்டுதலை மனதார நினைத்துக் கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு கையில் வைத்திருக்கும் மலர்களை முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை முடித்த பிறகு தங்களால் இயன்றால் அருகில் இருப்பவர்களுக்கு இந்த நெய்வேத்தியத்தை பிரசாதமாக வழங்கலாம். இயலாதவர்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு கொடுத்துவிட்டு தாங்களும் விரதத்தை நிறைவு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வசீகர தோற்றத்தை பெற பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த ஷண்முக அர்ச்சனையை தை கிருத்திகை நாளான நாளை நாம் செய்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -