நான்ஸ்டிக் தவா மற்றும் கடாய் இப்படி மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள் வீணாக போய்விடும்! எண்ணெய் பிசுக்கு போக என்ன தான் செய்யலாம்?

non-stick-tooth-paste

நான்ஸ்டிக் தவா மற்றும் கடாய், பேன்கள் பெரும்பாலும் நவீன தாய்மார்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நான்ஸ்டிக் பேன்கள் உபயோகிக்கும் பொழுது அதனை நீண்ட நாட்கள் தக்க வைப்பது எப்படி? என்பதை தெரியாமல் பலரும் வீணடித்து விடுகின்றனர். நான்ஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் அதிக நாட்கள் நமக்கு வருவதில்லை. இதனை அடிக்கடி வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதனுடைய விலையும் சற்று அதிகமாகத் தான் இருக்கிறது. நீங்கள் வாங்கும் நான்ஸ்டிக் பொருட்களை எப்படி சுத்தம் செய்வது? எப்படி பராமரிப்பது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

nonstick-dosa-tawa

சமையலில் எண்ணெய் அதிகம் சேர்க்காமல் குறைவாகவே சேர்த்து சமையல் செய்வதற்கு நான்ஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் உதவியாக இருக்கின்றன. மற்ற பொருட்களில் நாம் குறைந்த அளவு எண்ணெயில் சமையல் செய்யும் பொழுது நமக்கு அடியில் அடிப்பிடித்து விடும். ஆனால் நான்ஸ்டிக் பொருட்களில் நாம் அப்படி எதுவும் இல்லாமல் குறைவான எண்ணையை பயன்படுத்தி எளிதாக சமைக்க முடிகிறது. குறைவான எண்ணெய் பயன்பாடு கருதி நான்ஸ்டிக் பொருட்களை நாம் வாங்கிக் குவிக்கிறோம். ஆனால் அதனை முறையாக பராமரிக்க முடியாததால் உபயோகம் இல்லாமல் செய்து விடுகிறோம்.

நான்ஸ்டிக் பொருட்களை சாதாரண பொருட்களை போல் நம்மால் சோப் போட்டு அடிக்கடி கழுவி வைக்கவும் முடியாது. அப்படி செய்தால் அது சீக்கிரமாகவே கோட்டிங் போய்விடுகிறது. இதனால் தோசையும் சரியாக வருவதில்லை. இதற்காக எவ்வளவு நாள் தான் கழுவாமல் பயன்படுத்த முடியும்? நான்ஸ்டிக் பொருட்களை பொறுத்தவரை அதில் இருக்கும் கோட்டிங் போய் விட்டால் அதனை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல.

Kadaai

அலுமினியம் தேய தேய நமக்கு அதிலிருந்து அலுமினிய சத்து கிடைக்கும். இது உடலுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. இரும்பும் அப்படித்தான். ஆனால் நான்ஸ்டிக் பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு கேன்சர் கூட வரலாம் என்கிறது ஒரு ஆய்வு. இத்தகைய நான்ஸ்டிக் பொருட்களை நாம் தவிர்ப்பதே மிகவும் நல்லது. சரி இப்போது அதில் இருக்கும் எண்ணெய் பசையை எப்படி எளிதாக சுத்தம் செய்வது? என்பதை பார்ப்போம்.

- Advertisement -

நீங்கள் பயன்படுத்தும் நான்ஸ்டிக் பொருட்களை தினமும் பயன்படுத்திவிட்டு சோப்பு போடாமல் தண்ணீரை மட்டும் கொண்டு கழுவி வைத்து விடாதீர்கள். அதில் படிந்திருக்கும் எண்ணெய்கள் சேர்ந்து சேர்ந்து நாளடைவில் விடாப்பிடியாக மாறி விடுகிறது. இதனை நீக்குவதற்கு நீங்கள் பயன்படுத்தும் பற்பசை, அதாவது டூத் பேஸ்ட் சிறிதளவு இருந்தால் போதுமானது. நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து லேசாக சூடு ஏறியதும் சிறிதளவு டூத் பேஸ்ட் போட்டு தண்ணீர் தெளித்து ஸ்பான்ச் உபயோகித்து அழுத்தம் கொடுத்து தேய்த்தால் போதும். விடாப்பிடியான எண்ணெய்கள் நீங்கிவிடும்.

paste

அதன் பிறகு நீங்கள் பயன்படுத்துவதற்கும் சுலபமாக இருக்கும். சோப்பை விட பேஸ்ட் உபயோகித்து நான்ஸ்டிக் பொருட்களை தேய்த்து கழுவினால் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமலும் மீண்டும் பயன்படுத்தும் பொழுது நமக்கு பிரச்சனைகள் இல்லாமலும் இருக்கும். கூடுமானவரை நான்ஸ்டிக் பாத்திரங்களில் மரக்கட்டையால் ஆன கரண்டிகளை மட்டும் உபயோகிக்கவும். எவர்சில்வர் கரண்டிகளை உபயோகித்தால் நான்ஸ்டிக் பொருட்கள் சீக்கிரமே போய்விடும்.

இதையும் படிக்கலாமே
செலவே இல்லாமல் குஷன் ஷோஃபா(sofa) மாதம் 1 முறை இப்படி சுத்தம் செய்தால் போதுமா? கிருமிகளின்றி எப்போதும் வாசமாக இருக்கும்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.