செலவே இல்லாமல் குஷன் ஷோஃபா(sofa) மாதம் 1 முறை இப்படி சுத்தம் செய்தால் போதுமா? கிருமிகளின்றி எப்போதும் வாசமாக இருக்கும்!

sofa-cleaning1
- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் நாம் சுத்தம் செய்வது வழக்கம். மாதம் ஒரு முறை வீட்டை முழுமையாக சுத்தம் செய்து விடலாம். அப்படி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடும் பொழுது ஒவ்வொரு பொருட்களாக பார்த்து பார்த்து சுத்தம் செய்வோம். ஆனால் வரவேற்பறையில் இருக்கும் ஷோஃபாவை மட்டும் யாரும் கண்டு கொள்வதே இல்லை. அதை எப்படி சுத்தம் செய்வது? என்று தெரியாமல் இருக்கும். குஷன் ஷோஃபாவை எப்படி எளிமையாக சுத்தம் செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

sofa

குஷன் ஷோஃபாவை சுத்தம் செய்வதற்கு பெரும்பாலும் யாரும் மெனக்கெடுவது இல்லை. அதில் சிந்தும் சாப்பிடும் பொருட்களால் துர்நாற்றம் வீசக்கூடிய அபாயம் உண்டு. தொடர்ந்து அப்படியே பயன்படுத்துவதால் தூசுகளும், மாசுகளும் சேர்ந்து அழுக்கு படிந்து விடுகிறது. அதனால் இந்த ஷோஃபாவிற்கு கண்டிப்பாக மேலுறை போடுவது மிகவும் நல்லது. மேலுறை போடாதவர்கள் கட்டாயம் மாதம் ஒரு முறையாவது ஷோஃபாவை இப்படி சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -

வீட்டில் இருக்கும் மெத்தைகள், தலையணைகள், ஷோஃபா குஷன்கள் போன்றவற்றை மாதம் ஒரு முறையாவது மொட்டை மாடியில், நன்றாக அடிக்கும் வெயிலில், கொஞ்ச நேரமாவது வைக்க வேண்டும். இதனால் அதில் இருக்கும் நுண்கிருமிகள் நீங்கிவிடும். மேலுறை போடப்படாத ஷோஃபாக்களில் இதனை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். ஒரு சிறிய பௌலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா போட்டுக் கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் வாசனைக்காக மற்றும் கிருமிகளை நீக்கக்கூடியதுமான கிருமி நாசினிகள் சேர்க்க வேண்டும்.

இதற்கு 3 பின்ச் அளவிற்கு துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடர், சிறிதளவு டெட்டால் மற்றும் ஃபேப்ரிக் ஃபிரெஷ்னர் அதாவது துணிகளுக்கு வாசனைக்காக போடப்படும் கம்ஃபோர்ட், சாஃப்ட் டச் போன்ற ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ளலாம். இதனை நன்கு கலக்கி விட்டுக் கொள்ளுங்கள். ஒரு சுத்தமான துணி கொண்டு இந்த கலவையில் நனைத்து உங்களுடைய ஷோஃபாக்களை அழுத்தி நன்கு துடைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்யும் பொழுது அதில் இருக்கும் துர்நாற்றமும், கிருமிகளும் நீங்கி விடும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில், சுத்தமான துணி கொண்டு, நான்கைந்து முறை அழுத்தி துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு நாள் முழுவதும் நன்றாக அடிக்கும் வெயிலில் போட்டு வைத்து விடுங்கள். அவ்வளவுதாங்க இப்படி செஞ்சாலே போதும், உங்களுடைய குஷன் ஷோஃபா கிருமிகள் தொற்று இல்லாமல் சுத்தமாக வாசமாக இருக்கும்.

sofa-cleaning

நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள், அதில் செய்யும் அட்டகாசங்களை நாம் சொல்லவே தேவை இல்லை. ஷோஃபா மீது அமர்ந்து சாப்பிடுவதும், விளையாடுவதுமாக இருப்பார்கள். இதனால் ஷோஃபாக்களில் சிந்தப்படும் உணவு பொருட்களால் ஏற்படும் துர்நாற்றம் ஒரு வித ஒவ்வாமை கூட ஏற்படுத்தி விடும்.

- Advertisement -

sofa1

எப்பொழுதும் வீட்டில் திரைச்சீலைகள் போடப்படுவது போல ஷோஃபாக்களுக்கும் சிரமம் பார்க்காமல் மேலுறை போட்டு விடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை நினைவில் வையுங்கள். வாரம் ஒரு முறை இவைகளை எல்லாம் துவைத்து நன்கு வெயிலில் உலர்த்தி எடுத்து மீண்டும் போட்டு விட வேண்டும். இதனால் உங்களுடைய வீடு எப்பொழுதும் சுகாதாரத்துடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்களது கைகளும், கால்களும் வெள்ளையாக மாற உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்களும் வெறும் 5 நிமிடங்களுமே போதும். பெடிக்யூர், மெடிக்யூரையெல்லாம் தூக்கி தூரப் போட்டு விடுங்கள்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -