ஹாப்பிமா போட்டாலும் ‘வெஜ் ஃப்ரைட் ரைஸ்’ செய்ய வரவில்லையா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரியே இருக்கும்!

fried-rice1

ஃப்ரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது ஃப்ரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு ஃப்ரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? சரி நாமே வீட்டில் செய்யலாமே என்று செய்தால் கொடுமையிலும் கொடுமையாக இருக்கும். சரி நமக்கு தான் செய்ய தெரியவில்லையே! கடையில் இதற்கென்றே பிரத்யேகமாக விற்கும் ஹாப்பிமா மசாலாவை உபயோகித்து செய்து பார்க்கலாமே என்று செய்து பார்த்திருப்போம்.

fried-rice

அப்போவும் அது சரியாக வராது. என்னடா இது கொடுமையா போச்சு! இதுல ஒண்ணுமே இல்ல.. வெறும் நாலு காய்கறி தான் போட்டு இருக்காங்க.. ஆனாலும் நம்மால் செய்ய முடியலையே! என்று புலம்பாதே ஆளே இல்லை என கூறலாம். ஒன்னுமே இல்லைங்க! ரொம்ப ரொம்ப சிம்பிள் தான். இதற்காக எதையும் பிரத்தியேகமாக மெனக்கெட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. பத்து நிமிஷத்துல சுட சுட ஹோட்டல் ஸ்டைலில் நமக்கு பிடித்த வெஜ் ஃப்ரைட் ரைஸ் நாமே நம் கையால் செஞ்சிடலாம். அது எப்படின்னு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வெஜ் ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
ஹாப்பிமா – 2 பாக்கெட், பாஸ்மதி அரிசி – 250 கிராம், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குடைமிளகாய், வெங்காயத்தாள் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு பல் (பொடியாக நறுக்கியது) – 2, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்.

fried-rice2

குறிப்பு: இதில் சோயா சாஸ் ஆப்ஷனல் தான். உங்கள் வீட்டில் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். ஹாப்பிமாவில் அஜினமோட்டோ சேர்த்திருப்பார்கள். அதுவே உடலுக்கு கெடுதி தான். இதில் நாம் வேறு தனியாக சேர்க்க தேவையில்லை.

- Advertisement -

வெஜ் ஃப்ரைட் ரைஸ் செய்முறை விளக்கம்:
முதலில் பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். அதன்பின் சரியான பதத்தில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வேக வைத்து வடித்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசி குழைந்து போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

veg-fried-rice1

அதன்பின் கொடுத்துள்ள காய்கறிகளை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைக்கோசை மட்டும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு நன்கு வதக்கவும், அதன் பின் பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்த காய்கறிகளை போட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். காய்கறிகள் பாதி அளவு வெந்து இருந்தால் போதும்.

soya-sauce

அதன்பின் சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளவும். இப்போது வேகவைத்து எடுத்து வைத்த பாஸ்மதி மற்றும் ஹாப்பிமா மசாலாவை சேர்த்து அப்படியே எல்லாம் ஒன்றாக கலக்குற மாதிரி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கிடுங்க. அவ்வளவு தாங்க! இந்த முறையில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் வழக்கமாக செய்வதைவிட சூப்பராக வரும். வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

egg-fried-rice

அது போல் முட்டை சேர்க்க விருப்பமுள்ளவர்கள் முட்டையை ஒரு கடாயில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து எதுவும் செய்யாமல் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு லேசாக பிரட்டி கொண்டே இருக்க வேண்டும். முட்டைக்கு தேவையான அளவிற்கு உப்பு லைட்டாக சேர்த்துக் கொள்ளுங்கள். முட்டை மட்டும் தனியே வெந்து வந்துவிடும். அதை ஃப்ரைட் ரைஸ் செய்து முடித்தபின் இறுதியாக சேர்த்து ஒரு முறை கிண்டி விட்டு இறக்கி விட்டால் போதும். ‘எக் ஃப்ரைட் ரைஸ் ரெடி’.

இதையும் படிக்கலாமே
இட்லி மாவு அதிக நாட்கள் வரை புளிக்காமல் இருக்க இப்படித் தான் மாவு அரைக்க வேண்டும்! தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.