உங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் இவை இருந்தால் நன்மைகள் அதிகம் உண்டு

vastu

பணம் எனும் செல்வம் தான் இக்காலத்திலும் உலகை ஆட்சி புரிந்து வருகிறது. நமது பண்டைய கால சாஸ்திரமான வாஸ்து கலையின் படி ஒரு மனிதனுக்கு செல்வ வளம் பெருக, அவன் வசிக்கும் வீட்டின் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என கூறுகிறது. அந்த வடக்குத் திசையை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வடக்குப் பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vastu

நமது புராணங்களின் படி வடக்கு திசையின் அதிபதியாக இருப்பவர் செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் ஆவார். குபேர கடாட்சம் பெற விரும்புகிறவர்கள் தங்கள் வீட்டில் வடக்கு பகுதியில் ஜன்னலை அமைத்து அதன் வழியாக வீட்டிற்குள் வரும் அதிர்ஷ்ட காற்று வர வழிவகை செய்ய வேண்டும். வடக்குப் பக்கம் குறைந்தபட்சம் இரண்டு அடிகள் காலியிடம் விடப்பட்டு வெளிப்புற சுற்று சுவர் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் வடக்கு திசையில் உள்ள வடக்கு ஜன்னல் அவ்வீட்டிற்கு பல நன்மைகளை தருகிறது.

மேலும் நமது வீடுகளில் கூட இந்தக் குபேரனை தரிசனம் செய்து அவரின் அருளை முழுமையாக பெறுவதற்காக தான் நமது அலமாரியில் பணப்பெட்டிகளை நைருதி மூலையில் வடக்கு திசை பார்த்தவாறு வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. பொதுவாக ஒரு வீட்டின் வடக்கு பாகத்தில் இரண்டு வீடுகளுக்கு சேர்த்தவாறு இருக்கும் பொதுச்சுவர் இருக்கக்கூடாது. இருந்தால் நமது தோளின் மீது பாரம் ஏற்றிய மாதிரி பக்கத்து வீட்டை நமது வீடு சுமந்து கொண்டிருப்பதாக அர்த்தம். இதனால் நம் வீட்டிற்கு வாஸ்து குறைபாடுகள் ஏற்படுகிறது.

Kuber

மேற்கண்ட வாஸ்து விதி கிழக்கு, மேற்கு, தெற்கு என எல்லா திசை வீடுகளுக்கும் பொருந்தும் ஒரு அடிப்படை விதியாகும். ஒரு வீட்டின் வாயில்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், சாலைகள், வழிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் திசைகள் நிலையானவை என்பதால், ஒரு வீட்டின் வடக்குத் திசையில், சூரிய வெளிச்சம் வீட்டின் நிலத்தில் படுமாறு திறந்தவெளியாக இருப்பது மிக மிக அவசியம். வீட்டின் வடக்குச் சுவற்றில் ஒரு ஜன்னலேனும் இருந்து அதை பகலில் திறந்து வைப்பது மிகவும் நன்மையானது மற்றும் அவசியமானதும் கூட. இது அந்த வீட்டின் குடும்பத் தலைவரின் வருமானதை பெருக்குவதோடு குடும்பதில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
வாஸ்து படி வீட்டிற்கு தீட்ட வேண்டிய வண்ணங்கள் என்ன

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have North side of house in Tamil. It is also called as North side window in Tamil or Vastu palangal in Tamil or Vastu shastra in Tamil or Vadakku thisai vastu in Tamil.