உங்கள் வீடுகளுக்கு வாஸ்து அடிப்படையில் எந்த வண்ணங்கள் தீட்ட வேண்டும் தெரியுமா?

vastu

மிகப்பழமையான ஒரு கலையாக வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. நெடுங்காலமாகவே கட்டிடங்களை கட்டும் போது பயன்படுத்தப்பட்ட இந்த வாஸ்து சாஸ்திர கலை சமீப வருடங்களில் மக்கள் அனைவரும் விரும்பி தங்களுக்கான வீடு உள்ளிட்ட பிற கட்டிடங்களை கட்டும் போது பயன்படுத்துகின்றனர். இதில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் வீடுகளுக்கு எத்தகைய வண்ணங்கள் தீட்டுவது நன்மையளிக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிற்கு வரும் விருந்தினரை மனம் வருத்தப்படாதவாறு உபசரிப்பது நமது நாட்டின் பண்பாடு ஆகும். வீட்டிற்கு வந்து தங்கும் விருந்தனரின் அறையில் அவர்களின் மனதிற்கு இதம் தரும் வெளிர் நிற வண்ணங்களான மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு அல்லது லாவெண்டர் நிற வண்ணங்களை அந்த அறைகளுக்கு அடிக்க வேண்டும்.

வீட்டின் ஹால் எனப்படும் வரவேற்பு அறையில் வாஸ்துப்படி மஞ்சள், நீலம், பச்சை, பழுப்பு நிறம் போன்ற வண்ணங்களை தீட்டுவதால் வீட்டின் அழகை பிறரின் கண்களுக்கு மெருகேற்றி காட்டுவதோடு. அந்த அறையில் இருப்பவர்களின் மனதிற்கு இதம் தருவதாக அமைகிறது.

hall

சமையலறையில் வாஸ்துப்படி அழகான நிறங்களான வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, ரோஸ் பிங்க், சாக்லெட் மற்றும் சிவப்பு நிற பெயிண்ட்டுகளை அடிப்பது சிறந்தது. உணவு உண்ணும் அறைக்கு வாஸ்துப் படி பெயிண்ட் அடிக்க விரும்புபவர்கள் வெளிர் நிறங்களைத் தான் அடிக்க வேண்டும். அதிலும் பிங்க், பச்சை மற்றும் நீலம் போன்ற வண்ணங்களை தீட்டுவதால் புத்துணர்வை தரும். சமையல், டைனிங் அறைகளுக்கு கருப்பு அல்லது கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறங்களை அடிக்காமல் தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

bedroom

நமது உடலை சுத்தப்படுத்திக்கொள்ள உதவும் குளியலறைக்கு வாஸ்துப்படி பெயிண்ட் அடிக்க விரும்புபவர்கள் எப்போதும் புத்துணர்வு தரும் நிறங்களான வெள்ளை, வெளிர் நீலம் மற்றும் வெளிர் பச்சை போன்ற நிறங்களை தீட்டுவதால் குளியலறை உங்கள் உடல் மற்றும் மனதிற்கு உற்சாகத்தை தரும். குளியலறைக்கு கருப்பு அல்லது அடர் சிவப்பு நிறம் போன்றவற்றை தீட்டுவதை தவிர்க்க வேண்டும்.

எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு அறை படுக்கை அறை. படுக்கை அறை தான் நாம் நாமாக இருக்கக்கூடிய ஒரு இடம். படுக்கை அறையில் மனதிற்கு அமைதியை கொடுக்கும் வெளிர் நிற வண்ணங்களை தீட்டுவது நல்லது. அதிலும் வாஸ்துப்படி படுக்கை அறைக்கு பிங்க், வெளிர் நீலம் மற்றும் வெளிர் பச்சை வண்ணங்களை அடிப்பது நல்லது. மேலும் குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கை அறைக்கு பச்சை நிறம் தீட்டுவது மிகவும் சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
வீட்டு சுவற்றில் படம் மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu colours for rooms in Tamil. It is also called as Vastu shastra in Tamil or Vastu colours in Tamil or Veedu vasthu in Tamil or Vasthu shasthiram in Tamil.