- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீர்க்கதரிசியான நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி 2022 ஆம் ஆண்டில் என்னென்ன அதிர வைக்கும் நிகழ்வுகள் நிகழ இருக்கிறது...

தீர்க்கதரிசியான நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி 2022 ஆம் ஆண்டில் என்னென்ன அதிர வைக்கும் நிகழ்வுகள் நிகழ இருக்கிறது தெரியுமா?

- Advertisement -

தீர்க்கதரிசியாக இருக்கும் சிலர் முன் கூட்டியே எதிர்காலத்தைப் பற்றிய குறிப்புகளை கணித்து கூறுவதுண்டு. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நோஸ்ராடாமஸ் கூறியது பல விஷயங்கள் உலகத்தில் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வரிசையில் வரவிருக்கும் 2002ஆம் ஆண்டு அதிர வைக்கும் நிகழ்வுகள் என்னென்ன நிகழ இருக்கிறது? என்பதை முன்கூட்டியே நாஸ்ட்ரடாமஸ் கணித்து வைத்துள்ளார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

nostradamus

நோஸ்ராடாமஸ் கணிப்பின்படி 2022ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியான மாற்றங்களை இந்த உலகம் சந்திக்க இருக்கிறது. தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் சொத்துக்களாக மாறும். உலகில் பணவீக்கம் அதிகரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பசி பட்டினியால் வாடுவார்கள் என்று கணித்து கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இயற்கை பேரழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் உலக மக்களுக்கு 2022ஆம் ஆண்டு பெரிய புயல் தாக்கத்தினால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் என்றும் இந்த பிரச்சனை பெரிதாக பிரான்ஸ் நாட்டில் ஏற்படப் போகிறது என்பதையும் கணித்து கூறியுள்ளார். இதனால் பிரான்ஸ் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள மக்களும் பஞ்சத்தில் வாடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

2022ஆம் ஆண்டு மனிதன் கண்டுபிடித்த நவீன உபகரணங்கள் மூலம் பேரழிவு ஏற்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது ரோபோட்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் போன்றவற்றால் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து அது மனித குலத்திற்கு எதிராக மாறும் என்று கூறுகிறார். 2022ஆம் ஆண்டில் பெரும் வானியல் மாற்றம் ஒன்று ஏற்படும் என்றும் கணித்து கூறியுள்ளார். வேற்றுகிரகத்தில் இருந்து உடைந்து விழும் சிறு கோள் ஒன்று பூமியை தாக்க கூடும் என்றும், அது கடலை நோக்கி விழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சுனாமி போன்ற பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றும் கணித்துள்ளார். இதனால் கடலை சுற்றியுள்ள பெரும்பாலான நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படுமாம்.

nostradamus1

2022ஆம் ஆண்டு பல நாடுகளுக்குள் போர் மூளும் என்றும் இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாவார்கள் என்றும் கூறுகிறார். போர் முடியும் சமயத்தில் இயற்கை நிகழ்வு ஒன்று வித்தியாசமாக நடக்க இருக்கிறது. இந்த உலகமே ஸ்தம்பித்து இருளில் மூன்று நாட்களுக்கு மூழ்கி போகுமாம். இந்நிகழ்வு நடைபெறும் பொழுது போர் முடிவடைந்து உலகம் பேரொளி காணும், இதனால் கற்காலம் துவங்கும் என்றும் கணித்து கூறியுள்ளார்.

- Advertisement -

தீர்க்கதரிசியான நோஸ்ராடாமஸ் 2022ஆம் ஆண்டு உலகை உலுக்கும் அணுகுண்டு வெடிக்கும் என்றும், அதன் கதிர்வீச்சு தட்பவெப்ப நிலையில் மாற்றத்தை உண்டாக்கி, பனிப்பாறைகளை உருக வைக்கும் என்றும், இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் என்றும், தீவுகள், சிறு நாடுகள் அனைத்தும் நீரில் மூழ்கி காணாமல் போகும் என்றும் கணிக்கின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்து, மீதி இருக்கும் மக்களும் கதிர்வீச்சு காரணமாக பல பிணிகளுக்கு ஆட்படுவார்கள் என்றும் கணிக்கின்றனர்.

nostradamus2

அமெரிக்க நாட்டை கருப்பினத்தவர் ஒருவர் ஆளக்கூடும் என்றும் அவரே கருப்பினத்தின் கடைசி அதிபர் என்றும் ஏற்கனவே நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளது நடந்தேறியுள்ளது. அதே போல அமெரிக்கா நாட்டின் இரட்டை கோபுர தாக்குதல் பற்றி கூறியதும் அப்படியே நடந்து உள்ளது எனவே இவருடைய 2022 ஆண்டின் கணிப்பு உலக மக்களை பீதி அடைய செய்துள்ளது. எதுவாக இருப்பினும் இது ஒரு அனுமான தகவல்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.

சற்று முன்