உங்களுக்கு இருக்கும் இந்த நோய்களுக்கு எந்த கடவுளை வணங்குவது சிறப்பு தெரியுமா? நோயும், நோய் தீர்க்கும் கடவுளும்!

fever-murugan-vinayagar

ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு வரங்களை கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். நாம் வேண்டிய வரங்களை பெற அந்தந்த கடவுளை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். உதாரணத்திற்கு செல்வ வளத்தைப் பெற மகாலட்சுமி தாயாரையும், ஆரோக்கியம் மேம்பட தன்வந்திரி பகவானையும் வழிபடுவது சிறப்பு. அது போல நமக்கு இருக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உரிய கடவுள்களும் உண்டு. நம் நோய்களுக்கு உரிய கடவுளை வணங்கும் பொழுது, அந்த நோயானது விரைவாக தீரும் என்பது ஐதீகம். எனவே நோய்களையும், நோய்க்குரிய கடவுள்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

surya bhagavan

சொறி, சிரங்கு, குஷ்டம் போன்ற தோல் வியாதிகள் நீங்க சூரிய பகவான், சங்கரன் கோவில் சங்கர நாராயணன், வைத்தீஸ்வரன் ஆகிய கடவுளை வணங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அம்மை நோய்கள் நீங்க முத்துமாரி அம்மன், முத்தாலம்மன், கருமாரி ஆகியோரை வழிபடுவது சிறப்பு. பித்தம் தீர முருகனை வழிபடலாம். வாயு கோளாறுகள் நீங்க ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பான பலனைக் கொடுக்கும்.

எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீர சிவபெருமான், முருகன் ஆகியோரை வழிபட சிறப்பான பலன்களை பெறலாம். ரத்த அழுத்தம், ரத்தசோகை பிரச்சினைகள் தீர முருகனையும், செவ்வாய் பகவானையும் வழிபடுவது சிறப்பு. நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் தீர சந்திர தரிசனம் செய்யலாம், மேலும் விசாலாட்சி அம்மனை வழிபட நல்லது நடக்கும். ஜீரம், ஜன்னி, தலைவலி போன்ற பிரச்சனைகள் தீர சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து பிள்ளையாரை வழிபடலாம், சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடலாம்.

runavimosana-lingam

கொடிய புற்று நோயைக் கூட விரட்டக் கூடிய சக்தி சிவபெருமானுக்கு உண்டு, சிவபெருமானை நோக்கி விரதம் இருந்து திங்கட்கிழமை தோறும் அவரை வழிபட புற்று நோய் நீங்கும். கண் பார்வை பிரச்சனைகள் நீங்க சிவபெருமான், முருகன், விநாயகர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வரலாம். தலைமுடி பிரச்சனை, தலை முடி நரைத்தல், உதிர்தல் போன்ற தொந்தரவு தீர மகாலட்சுமி மற்றும் முருகன் உடன் கூடிய வள்ளியை வழிபட்டு வரலாம்.

ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், சைனஸ், நிமோனியா போன்ற பிரச்சினைகள் தீர மகா விஷ்ணுவை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை ஆகிய பிரச்சனைகள் தீர முருகனை வழிபடலாம். இதயம் தொடர்பான பிரச்சனைகள் தீர மாரடைப்பு, மார்பு வலி போன்ற குறைகள் நீங்க சக்தி, கருமாரி, துர்க்கை அம்மனை வழிபடலாம். நீரிழிவு, சிறுநீரக பிரச்சனைகள் தீர பழனி முருகனை வழிபடுவது சிறப்பு. அஜீரணம், குடல்வால் அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா, பேதி போன்ற நீங்க முடியாத பிரச்சனைகளுக்கு தட்சிணாமூர்த்தி, முருகன் போன்ற தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

sakkarathazhvar

மேலும் மூட்டுவலி, யானைக்கால், காலில் ஆணி போன்ற பிரச்சனை தீர சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். வாதம், கீழ் வாதம், பக்கவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளை வாதம் ஆகிய பிரச்சனைகள் தீர சனி பகவான், சிவபெருமான் ஆகிய உக்ர தெய்வங்களை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். மேற்கூறிய பிரச்சனைகள் எது உங்களுக்கு இருந்தாலும் அதற்குரிய கடவுளரை தினம் தோறும் வணங்கி பாருங்கள். அவர்களுக்கு வேண்டிக் கொண்டு நேர்த்தி கடன் செலுத்த ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து கொள்ளுங்கள். உங்கள் நோய் தீர்ந்ததும் அதற்குரிய கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி விடுங்கள் ஆரோக்கியம் பலம்பெறும்.