இந்த தேர்தலில் சீமான் மற்றும் கமல் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

arasiyal
- Advertisement -

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(மே 2) தொடங்கியது. இதில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் மூன்றாம் இடத்தை எந்த அணி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்து வந்தது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருதுகண்ணிப்பு படி “மக்கள் நீதி மையம்” அல்லது அ.ம.மு.க தான் மூன்றாம் இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் “நாம் தமிழர் கட்சி” அந்த கருத்து கணிப்புகளை தகர்த்தெறிந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

seeman

தனித்தே போட்டி என்ற கொள்கையோடு 234 தொகுதியிலும் களம் கண்ட “நாம் தமிழர் கட்சி” பெரும்பாலான தொகுதிகளில் வாக்குகளை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் அவர் 48,597 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இந்த தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட திரு சேகர் அவர்கள் 88,185 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு அடுத்த படியாக அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட திரு குப்பன் அவர்கள் 50,524 வாக்குகள் பெற்றுள்ளார்.

- Advertisement -

திருவொற்றியூர் தொகுதியில் அ.தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு வித்யாசம் : 1,927
திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு வித்யாசம் : 39,588

மக்கள் நீதி மையம்:
மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக நடிகர் திரு கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இந்த தொகுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற ஒரு இழுபறி இருந்துகொண்டே இருந்தது. இறுதியாக பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட திருமதி வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

- Advertisement -

திரு கமல்ஹாசன் பெற்ற வாக்குகள் : 51,481
திருமதி வானதி சீனிவாசன் பெற்ற வாக்குகள் : 53,209
மயூரா எஸ்.ஜெயக்குமார்(இந்திய தேசிய காங்கிரஸ்) பெற்ற வாக்குகள் : 42,383
அ அப்துல் வாகப்(நாம் தமிழர் கட்சி) பெற்ற வாக்குகள் : 4,300

திரு கமல்ஹாசனை விட 1728 வாக்குகள் அதிகம் பெற்று திருமதி வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

- Advertisement -