ஜனவரி மாத பலன் – எண் கணிதம் அடிப்படையில் உங்களுக்கான பலன் ?

astrology

பிறந்த நட்சத்திரம் மற்றும் நாள் தெரியாதவர்கள், தங்கள் பிறந்த தேதியின் மூலம் நடக்கப்போகும் பலன்களைத் தெரிந்துக்கொள்ள உதவுவதே எண்கணித பலன்கள். ஒருவர் தங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில், இங்கே ஜனவரி மாதம் 2018 ஆம் ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.

1,10,19,28 – ல் பிறந்தவர்களுக்கு:

one

மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். அண்டை அயலார் மற்றும் சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். அதனால் நன்மையே உண்டாகும். கணவன் மனைவிக்குள் சிறு சங்கடங்கள் வந்து நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தை வழியில் அனுகூலமும், ஆதரவும் கிடைக்கும். தாய் மற்றும் உறவினர்களால் நன்மை உண்டாகும். தாய் உடல்நிலையில் சிறு பாதிப்பு வந்து நீங்கும். குழந்தைகள் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரம், உத்தியோக விஷயங்களில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை.

பரிகாரம்:

ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

2,11,20,29 – ல் பிறந்தவர்களுக்கு:

two

நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். குடும்ப பிரச்னைகளைப் பொறுமையுடன் கடைப்பிடிக்கவும். அவசரத் தேவைக்காக கடன் வாங்க நேரிடலாம். குழந்தைகளால் சில சங்கடங்கள் உருவாகும். பூர்வீகச் சொத்து பிரச்சினை வந்து நீங்கும். தாயின் உடல்நிலை பாதிப்பு, தாய் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். உடல்நிலை ஆரோக்கியமடையும். தந்தை வழியில் ஆதரவும், அனுகூலமும், மூத்தோர் வழிகாட்டுதலும் கிடைக்கும். உத்தியோகம், தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆளுமை உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

பரிகாரம்:

ஸ்ரீ ஆதிசேஷன் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு நன்மை தரும்.

3,12,21,30 – ல் பிறந்தவர்களுக்கு:

three

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். முத்தோர்கள், நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.  மனக் குழப்பங்கள் வந்து நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழல் உள்ளதால் கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பல வகையில் பண வரவு வந்தாலும், சில நேரங்களில் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மனதில் உற்சாகம், தைரியம் அதிகரிக்கும். தாய் மற்றும் உறவினர்களால் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் எதிர்கால நலனுக்குத். தேவையான விஷயங்களை செயல்படுத்துவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். மனக்குழப்பங்களையும், சோர்வையும் தவிர்க்க யோகா, மற்றும் தியானம் நல்லது.

பரிகாரம்:

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு நன்மை தரும்.

4,13,22,31 – ல் பிறந்தவர்களுக்கு:

four

இதுவரை நீங்கள் செய்த புண்ணியங்களின் பலனை அனுபவிப்பீர்கள். தெய்வ அனுகூலம் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் தனித்திறமை வெளிப்படும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். புதிய வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பல வகையில் பணவரவு உண்டாகும். தாய் மற்றும் உறவுகளால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். தந்தையால் அனுகூலமும், மூத்தோர்கள் உதவியும், ஆசியும் கிடைக்கும். தொழில் வழியில் சில விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நீண்ட நாளாக வரும் என்று எதிர்பார்த்த   பணம் வந்து சேரும்.

பரிகாரம்:

சிவபெருமான் வழிபாடு மற்றும் ஸ்ரீ சாஸ்தா வழிபாடு நன்மை தரும்.

5,14,23 – ல் பிறந்தவர்களுக்கு:

five

தடைகளைப் படிக்கல்லாக மாற்றி எதிலும் வெற்றி பெறுவீர்கள். எந்தச் செயலிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பதற்றமில்லாமல் பொறுமை, நிதானத்துடன் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. முயற்சியே திருவினையாக்கும் என்பதை உணரும் காலம். வீண் செலவு உண்டாகுமென்பதால், சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. குழந்தைகளுக்கு மிக நல்ல காலம். அவர்கள் எதிர்காலத்துக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். தொழில், உத்தியோக விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். தாயால் அனுகூலமும், தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். தொழிலில் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை பாதிப்பு, தந்தையால் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

பரிகாரம்:

ஸ்ரீமத் ராமாநுஜர் மற்றும் ஸ்ரீ துர்கை வழிபாடு நன்மை தரும்.

6,15,24 – ல் பிறந்தவர்களுக்கு:

six

தெய்வ அனுகூலம் நிறைந்த காலம். நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். யாரையும் பகைத்துக். கொள்ள வேண்டாம். வீண் விரயங்களைத் தவிர்க்க சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தாய் உடல் நிலையில் கவனம் தேவை. உறவினர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்க்ச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் பண வரவு உண்டாகும்.  குழந்தைகளால் மகிழ்ச்சி இருப்பினும், குழந்தைகளைக் கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. மூத்தோர்களால் நன்மை உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் அபரிமித லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்:

ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு மற்றும் குருபகவான் வழிபாடு நன்மை தரும்.

7,16,25 – ல் பிறந்தவர்களுக்கு:

seven

அதிர்ஷ்டம் நிறைந்த காலம் ஆகும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல நேரிடும். தாய் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. தாய் உடல் நலனில் கவனம் தேவை. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குழந்தைகள் அறிவுத்திறனுடன் செயல்பட்டு ஆச்சர்யப் படுத்துவார்கள். வாழ்க்கைத்துணையால் பணவரவு உண்டு. தொழில், வியாபாரம் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள், சக பணியாளர்களிடம் கவனம் தேவை. தந்தை மற்றும் மூத்தோர்களால் ஆதாயம் உண்டு.

பரிகாரம்:

ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு மற்றும் ஸ்ரீ நாகராஜா வழிபாடு நன்மை தரும்.

8,17,26 – ல் பிறந்தவர்களுக்கு:

eight

விடா முயற்சியே வெற்றி தரும் என்பதை உணரும் காலம். தடைக்கல்லையும் தனது வைராக்கியத்தால் படிக்கல்லாக மாற்றுவீர்கள். பல வகையில் பணவரவு உண்டாகும். எதிலும் நன்கு சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சகோதர, சகோதரி, அண்டை அயலாரால் மேன்மை உண்டாகும்.  தாய்வழி உறவினர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச்  செல்வது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. தந்தை உடல்நிலையில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர்ப் பயணங்களால் நன்மை உண்டாகும். ஆன்மிகப் பயணங்கள் செல்ல நேரிடும். மற்றவர்களின் வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். முன் ஜாமீன் போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

9,18,27 – ல் பிறந்தவர்களுக்கு:

nine

உங்கள் வாழ்வின் யதார்த்தத்தை உணரும் காலமாகும்.  எதிலும் விழிப்புடன் இருந்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் மற்றும் மூத்தோர்களின் ஆதரவு கிடைக்கும். தங்கள் எண்ணத்தைப் போராடி நிறைவேற்றிக்கொள்வீர்கள்.  பேச்சில் கவனம் தேவை. வீண் வாக்குறுதிகளைத் தவிர்க்கவும். சகோதர, சகோதரிகள், அண்டை அயலாரால் நன்மை உண்டு. வரவு செலவில் கவனம் தேவை. குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளைக் கண்காணிப்பில் வைத்து அரவணைத்துச் செல்வது நல்லது. மனதில் தைரியம், உற்சாகம் நிரம்பியிருப்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. எதிரிகள் விலகிச் செல்வார்கள். தந்தை வழியில் ஆதாயம் உண்டு. வாழ்க்கைத்துணையின் தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தொழில், உத்தியோகத்தில் வெற்றியும், பல வகையில் பணவரவும் உண்டாகும்.

பரிகாரம்:

ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணர் வழிபாடு நன்மை தரும்.