1 ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் போதும் உங்கள் முகத்தை நீங்கள் அடிக்கடி கண்ணாடியில் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள் தெரியுமா?

oats-face
- Advertisement -

நம் உடலுக்கு தேவையான சத்துக்கள், நம்முடைய சருமத்திற்கும் தேவைப்படுகிறது. சரும பொலிவிற்கு புதிதாக எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை. நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களை வைத்தே நம் முகத்தை ஆரோக்கியமாக பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் பாதுகாத்து வர முடியும். வெளியில் செல்லும் பொழுது தூசு, மாசிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க தலை மற்றும் முகத்தை மூடிக் கொண்டு பயணிக்கலாம். பின்னர் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் இருந்தால் நம் முகம் எப்பொழுதும் பொலிவாக தோற்றமளிக்கும்! அது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் அல்லது அதிகப்படியான வறட்சி இது இரண்டுமே சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களும் அல்லது வறட்சியான சருமம் கொண்டவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் நல்ல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது ஓட்ஸ்!

- Advertisement -

உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தும் இந்த ஓட்ஸ், நம்முடைய சருமத்திற்கும் ரொம்பவே பாதுகாப்பானதாக இருக்கிறது. முகத்தில் இருக்கும் மேடு, பள்ளங்களை சரி சமமாக மாற்றுவதற்கு உதவக்கூடிய இந்த ஓட்ஸ் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன், 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறு சேர்க்க வேண்டும். தக்காளி சாறு சேர்க்கும் பொழுது விதைகளை நீக்கிவிட்டிருக்க வேண்டும். பின்னர் அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு கேரட் சாறு சேர்க்க வேண்டும்.

இந்த மூன்று பொருட்களையும் நன்கு ஒன்றுடன் ஒன்று கலந்து முகம் முழுவதும் பேக் போல போட்டு அரை மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். பேக் போடும் பொழுது முன்னும் பின்னுமாக எல்லா இடங்களிலும் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்யும் பொழுது உங்கள் முகத்திற்கு நல்ல ஒரு ரத்த ஓட்டம் கிடைத்து, புத்துணர்ச்சி அடையச் செய்யும். இறந்த செல்களை நீக்கி தேவையற்ற முடிகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை ஒழித்து உங்கள் முகத்தை மேடு, பள்ளங்களில் இருந்து, சொரசொரப்பு தன்மையிலிருந்து மீட்டெடுப்பதற்கு உரிய எல்லா வேலைகளையும் இந்த ஓட்ஸ் கலவை செய்யும்.

- Advertisement -

நம் முகம் முதிர்ச்சியான தோற்றம் பெறுவதிலிருந்து தடுப்பதற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் தேவை. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ள ஆப்பில், ஆரஞ்ச், தக்காளி, கேரட், முட்டைகோஸ், வெங்காயம், பூசணிக்காய், காலிஃப்ளவர், கீரை வகைகள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடித்து வர சருமத்துளைகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறி, தகதகவென தங்கம் போல நம் சருமம் ஜொலிக்க ஆரம்பிக்கும்.

சோப்பு போட்டு உடல் முழுவதும் குளித்தாலும், முகத்திற்கு தனியாக இயற்கை வழி முறையைக் கையாளுவது முக அழகிற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். அரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள், பயத்தமாவு, பால், கடலை மாவு ஆகியவற்றை சம அளவில் எடுத்து குழைத்து முகத்திற்கு மசாஜ் செய்து கழுவி வந்தால் நாளடைவில் இளமையான தோற்றத்தை அடைந்து விடலாம்.

- Advertisement -