இந்த சர்க்கரை வியாதி வந்ததில் இருந்து எதுவும் ருசியாக சாப்பிட முடியவில்லையா? இதோ உங்களுக்காக சூப்பர் பிரேக்ஃபாஸ்ட் ஓட்ஸ் ஊத்தப்பம்.

- Advertisement -

ஒரு காலத்தில் எல்லாம் ஒருவரை ஒருவர் நாம் பார்த்துக் கொள்ளும் போது, நீங்க எப்படி இருக்கீங்க உங்க வீட்ல எப்படி இருக்காங்க இது போன்ற ஒரு பரஸ்பரமான நல விசாரிப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வயது வந்து விட்டாலே அதன்பிறகு பார்ப்பவர்களிடம் எல்லாம் கேட்கும் முதல் கேள்வியே உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா? அது எவ்வளவு இருக்கு? என்ன மாத்திரை சாப்பிடுறீங்க? இப்படியான கேள்விகள் தான் அதிக அளவில் வருகிறது. அந்த அளவிற்கு சளி, காய்ச்சல் சாதாரணமாக வருவது போல் சர்க்கரை வியாதி வந்துவிட்டது. இது குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. சிறு குழந்தைகளுக்கு கூட இன்று சர்க்கரை வியாதி இருக்கிறது.

சர்க்கரை வியாதி வந்தவர்கள் நிலைமை பெரும்பாடு தான், என்ன செய்வது எதை சாப்பிட்டாலும் பயந்து தான் சாப்பிட வேண்டும். இனி அந்த கவலையே வேண்டாம். இந்த ஓட்ஸ் ஊத்தப்பத்தை தாராளமாக சாப்பிடலாம். அதே நேரத்தில் மிக மிக எளிமையாகவும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு உணவு தான். சரி வாங்க இந்த ரெசிபி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப், ஓட்ஸ் -1/2 கப், தயிர் – 1/4 கப், பெரிய வெங்காயம் – 1, நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் ஓட்ஸ், கால் கப் தயிர் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு இதை எடுத்து வைத்த கோதுமை மாவில் சேர்த்து கலந்து விடுங்கள். இந்த மாவை கரைக்க தண்ணீர் தேவை இல்லை. தயிர் சேர்த்து அரைத்து இருப்பதால், உங்களுக்கு தேவை பட்டால் தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இதில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட்டு பிறகு ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் தோசை கல்லை வைத்து, கல் சூடான பிறகு இந்த மாவுவை எடுத்து உற்ற ஆரம்பியுங்கள். ஊத்தப்பம் என்பதால் கொஞ்சம் தடி ஆகவே ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு மேல் வெங்காயம் நல்ல நீள வாக்கில் நறுக்கி தூவி மேலே எண்ணெய் ஊற்றி தோசையை இரண்டு புறமும் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்து மல்லி இவைகளை கூட பொடி பொடியாக நறுக்கி மேலே தூவி ஊற்றலாம். சுவையான அதே சமயம் ஆரோக்கியமான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி.

இதையும் படிக்கலாமே: சுட்ட கத்திரிக்காயில் இவ்வளவு டேஸ்டா, இவ்வளவு சுவையா குழம்பு வைக்க முடியுமா? நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

குழந்தைகளுக்கு இதில் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை கூட துருவி சேர்த்து கொடுக்கலாம். நல்ல ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவு. உங்களிடம் கோதுமை மாவு இல்லை என்றால் நாம் வீட்டில் அரைத்து வைத்து இருக்கும் இட்லி மாவை கூட, கோதுமை மாவுக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -