லிட்டர் லிட்டராக முகத்தில் எண்ணெய் வடிகிறதா? எண்ணெய் வழியும் சருமத்தை 10 பைசா செலவில்லாமல் பளிச்சென மாற்றுவது எப்படி?

oily-skin-oats
- Advertisement -

எல்லோருடைய சருமமும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுள்ளது அல்ல! ஒருவருடைய சருமம் வறண்ட தன்மையுடனும், ஒருவருடைய சருமம் ஈரப்பதத்துடனும், ஒருவருடைய சருமம் எண்ணெய் வழியும் தன்மையுடனும் இருக்கக்கூடும். அந்தந்த சருமத்திற்கு ஏற்ப சில விஷயங்களை கடைபிடிக்கும் போது தானாகவே அந்த பிரச்சினைகள் மறையத் துவங்கும். அந்த வகையில் லிட்டர் லிட்டராக முகம் முழுவதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? அதில் இருந்து முற்றிலுமாக தப்புவது எப்படி? என்கிற பயனுள்ள தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முகத்தில் எண்ணெய் வழிந்தால் கண்டிப்பாக அழுக்குகள் சேர்ந்து முகப்பருக்கள் அதிகரிக்கத் துவங்கி விடும். நாம் சாப்பிடும் உணவின் மூலமும், முகத்தில் இருக்கும் துவாரங்கள் வழியாக எண்ணெய் வழிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதனால் தான் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருந்தால் முகப்பருக்கள் வராது என்று கூறப்படுவது உண்டு.

- Advertisement -

நீங்கள் அதிகப்படியாக உணவின் மூலம் எடுக்கும் எண்ணெய் வேறு வழிகளில் செல்ல முடியாமல் சரும துவாரங்கள் வழியே வெளியேறுகிறது. இதனால் தான் முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கிறது. இதில் காற்றில் இருக்கும் மாசு அமர்ந்து கொண்டு துளைகளுக்குள் சென்று சருமத்தை பொலிவிழக்க செய்து விடுகிறது. இதனால் சருமம் ஆரோக்கியமற்றதாக முகப்பருக்களுடன் காட்சி அளிக்கிறது.

ரொம்பவே தரமாக இருக்கக்கூடிய கிரீம் போன்ற செயற்கை பொருட்களை பயன்படுத்தினாலும், இயற்கையாக கையாளக் கூடிய இந்த குறிப்புகளை போன்று அவை வருவது இல்லை. இதனால் சருமத்தில் அதிக மேக்கப் போடுவதை எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்களுக்கு, தலையில் பொடுகு தொல்லையும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உச்சந்தலையில் இருக்கும் மண்டையோட்டு பகுதியின் வழியாக வெளியேற கூடிய எண்ணெய் பசையானது பொடுகு பிரச்சனையை உண்டாக்கும்.

- Advertisement -

இவற்றை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் சக்தி நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பொருட்களில் உள்ளது. அத்தகைய பொருட்களில் ஒன்றாக இருக்கும் தக்காளி ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். ஒரு குழிக்கரண்டி தக்காளி சாறுடன், ஒரு குழி கரண்டி ஓட்ஸ் எடுத்து அரைத்து சேர்த்து கூழாக மாவாக கலந்து கொள்ளுங்கள். பின்பு இதை முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்து அப்படியே 20 நிமிடம் உலர வைத்து பின் முகத்தை அலம்பினால் எண்ணெய் பசை வெளியேறுவது கட்டுப்படும். இதனால் முகத்தில் தழும்புகள், கீறல், வடுக்கள் போன்றவை இருக்காது.

மென்மையான தேகமும், மிருதுவான தன்மையுடன் இருக்கக்கூடிய சருமத்தையும் பெறுவதற்கு ஓட்ஸ் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஓட்ஸில் இருக்கும் சத்துக்களும், தக்காளியில் இருக்கும் சத்துக்களும் சேர்ந்து வினை புரியும் பொழுது நம் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் கட்டுக்குள் அடங்கும். இதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செய்து பயன் அடைந்து கொள்ளலாம். ரொம்பவே சுலபமாக கிடைக்கக் கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து அதிகப்படியாக வழியும் எண்ணெயை ஒரு மாதத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அதன் பிறகு நீங்கள் சாதாரண சருமம் கொண்டவர்கள் போல இருப்பதை உணர்வீர்கள் எண்ணெய் வழியாது.

- Advertisement -