இந்த சோப்பை முகத்திற்கு போட்டால் எண்ணெய் வடியும் பிரச்சனை உடனே நிற்கும்.

face
- Advertisement -

முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளது. தேவையற்ற கரும்புள்ளிகள் முகப்பருக்கள் முக அழகை குறைக்கின்றது எனும் பட்சத்தில் பின் சொல்லக்கூடிய குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். இந்தக் குறிப்பில் மூன்று வகையான ஸ்டெப் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை முறையாக பின்பற்றினால் எண்ணெய் வடியும் பிரச்சனைக்கும், முகப்பரு பிரச்சனைக்கும் நிரந்தரமாக சீக்கிரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும்.

Step 1:
முதலில் முகத்தை கழுவுவதற்கு கடையில் வாங்கக்கூடிய சோப்பை தவிர்த்து விடுங்கள். எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்கள் முகப்பரு அதிகம் உள்ளவர்கள் பின் சொல்லக்கூடிய நாமே தயார் செய்யக்கூடிய இந்த லிக்விடை போட்டு முகம் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளி கருவளையம் முகப்பொருள் அனைத்தும் காணாமல் போகும். இந்த ஃபேஸ் வாஷ் தயார் செய்ய நமக்கு 3 பொருட்கள் தேவை.

- Advertisement -

சாதம் வடித்த கஞ்சி – 1/4 கப், லிக்விட் கேஜ்டல் சோப் (liquid castle soap) – 1/4 கப், கடையிலிருந்து வாங்கிய ஆலோவேரா ஜெல் – 1 ஸ்பூன். வழக்கம்போலத் தான் அலோவேரா ஜெல்லில் கலர் இல்லாமல் பெர்ஃப்யூம் இல்லாமல் வாங்கிக் கொள்ளுங்கள். இதில் இயற்கையான அலோவேரா ஜெல் சேர்க்கலாம். அப்படி இயற்கையான முறையில் அலோவேரா ஜெல் சேர்த்தால் இந்த சோப் லிக்விடை பிரிட்ஜில் வைத்தால் கூட இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் கெட்டுப் போகாமல் இருக்கும். லிக்விட் கேஸ்டல் சோப் என்பது எந்த ஒரு கெமிக்கலும் சேர்க்காத சோப். இதை சேர்த்தால் தான் சோப்பு போட்டு முகத்தை கழுவுவது போல முகத்தில் நுரை வரும். இந்த லிக்விட் கேஸ்டல் சோப்பை ஆன்லைனில் சுலபமாக வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தை எடுத்து சாதம் வடித்த கஞ்சி, லிக்விட் கேஸ்டல் சோப், ஆலிவேரா ஜெல், இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக அடித்து கலக்கினால் நுரை பொங்க ஒரு லிக்விட் கிடைக்கும். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாது. கட்டாயம் கடையில் வாங்கிய அலோவேரா ஜெல்லை சேர்த்தால் தான் 7 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். முகம் கழுவ இந்த லிக்விடை பயன்படுத்துங்கள்.

- Advertisement -

Step 2:
முகப்பருவை நீக்க தினமும் போட வேண்டிய வேப்பிலை ஜெல் தயார் செய்வது எப்படி. ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகளை நன்றாக நசுக்கி போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்தால் வேப்பிலை தண்ணீர் நமக்கு கிடைத்து விடும்.

ஒரு சிறிய பவுலில் 1 டேபிள் ஸ்பூன் ஆலுவேரா ஜெல் சேர்த்து அதில் மூன்று ஸ்பூன் அளவு இந்த வேப்பிலை தண்ணீரை ஊற்றி, நன்றாக அடித்து கலக்கினால் ஒரு ஜெல் நமக்கு கிடைக்கும். இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லை இரவு தூங்க போகும் போது முகத்தில் லேசாக அப்படியே கண்ணுக்கு தெரியாமல் அப்ளை செய்து விட்டு விடுங்கள். அது அப்படியே காய்ந்து விடும். முகத்தை கழுவாமல் இரவு தூங்கச் சொல்லுங்கள். மறுநாள் காலை எழுந்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இது முகப்பருவை மீண்டும் வராமல் தடுக்கும்.

Step 3:
அடுத்தபடியாக எண்ணெய் பசையை குறைக்க சூப்பரான ஒரு ஃபேஸ் பேக். ஒரு சிறிய பவுலில் முல்தானி மெட்டி – 2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், தக்காளி பழச்சாறு – தேவையான அளவு ஊற்றி, இதை ஒரு ஃபேஸ் பேக்காக தயார் செய்து முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் மசாஜ் செய்தபடி முகத்தை கழுவி விடுங்கள். வாரம் ஒரு முறை இந்த பேக்கை போட எண்ணெய் வடியக்கூடிய பிரச்சனை குறையும்.

- Advertisement -