எண்ணெய் வழியும் சருமத்திற்கு 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே இப்படி செய்து பாருங்கள், அனைவரும் வியக்கும் பேரழகு உங்களுக்கும் கிடைக்கும்.

oily-skin-veggies
- Advertisement -

முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு முகப்பரு மற்றும் கருந்திட்டுக்களை ஏற்படுத்துகிறது. நாட்பட நாட்பட முகம் முழுவதும் பரவி முகத்தின் இயற்கை அழகை கெடுத்து விடுகிறது. முகம் மாசு, மரு இல்லாமல் சுத்தமாக, பருக்கள் தோன்றாமல் இருந்தாலே எல்லோருமே பேரழகு தான். பத்து பைசா செலவழிக்காமல் வீட்டிலேயே எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிப்பது எப்படி? நாமும் எப்படி பேரழகாக மாறலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வறண்ட சருமத்தை விட, எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் முகத்தைக் கழுவிய பத்து நிமிடத்தில் முகம் முழுவதும் எண்ணெய் வடிய ஆரம்பித்து விடும். காற்றின் மூலம் பரவும் மாசுகள் அந்த எண்ணெய் பசையின் மீது அமர்ந்து முகத் துவாரங்களுக்குள் சென்று முகப்பருக்களை உண்டாக்கிவிடும். மேலும் தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயும் முகம் வரை சென்று இந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள் தலையை முதலில் சுத்தமாக பராமரிக்க வேண்டும். வாரம் மூன்று நாட்கள் தலையை சுத்தம் செய்து லேசாக எண்ணெயைத் தடவினால் போதும். தலையில் கையை வைத்து விட்டு, அதை முகத்தில் கொண்டு போனாலும் முக அழகு சீர்கெடும். எனவே நீங்கள் தினமும் ஆவி பிடிப்பது இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் வேப்பிலை மற்றும் துளசி இலைகளை போட்டு ஆவி பிடித்தால் முகத்தில் இருக்கும் சிறு வாரங்களுக்குள் சென்று கெட்ட செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும். முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை, அழுக்குகள், தூசிகள் அனைத்தும் வியர்வை வழியாக வெளியில் வந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு முகத்தை துடைத்து விட்டு நீங்கள் அன்றைய நாளில் செய்யக்கூடிய சமையல் பொருட்களை வைத்தே எளிதாக முகத்தை பராமரிக்கலாம். காய்கறி வெட்டும் பொழுது தக்காளி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் சாறு, கேரட், வெள்ளரிக்காய், எலுமிச்சை போன்ற காய்கறிகளின் சாற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்தால் கண்களில் சோர்வு நீங்கி கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறையும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்து கண் பார்வை தெளிவடையும்.

காய்கறிகள் மட்டுமல்லாமல், பழங்கள் நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அதனுடைய சாறு அல்லது தோல் பகுதியினை தூக்கி போட்டு விடாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய காய்கறி மற்றும் பழ கழிவுகளை கொண்டு ரொம்பவே சுலபமாக முகத்தை பராமரிக்கலாம். உங்கள் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இந்த பழ மற்றும் காய்கறி சாற்றை முகத்திற்கு மசாஜ் செய்து பேக் போல போட்டு உலர விட்டு விடுங்கள்.

பத்து நிமிடம் உலரவிட்டு பின்னர் முகத்தை சுத்தம் செய்தால் முகத்திற்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து எளிதாக நம் முகத்தை பேரழகாக மாற்றி விடலாம். தினமும் இது போல் நீங்கள் இயற்கையான முறையில் சருமத்தை பராமரித்து வந்தால் நிச்சயம் நீங்களும் மாசு மருவற்ற பேரழகாக திகழலாம்.

- Advertisement -