பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் இருக்கும் தாழ்பால் 10 நிமிடத்தில் பளிச் பளிச்சென மாற இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

door
- Advertisement -

நிலைவாசல் கதவு அதில் இருக்கும் தாழ்ப்பால் கைப்பிடி, இவைகளை எல்லாம் நாம் அடிக்கடி மாற்ற மாட்டோம். காலம் காலமாக பல வருடங்களாக அவையெல்லாம் அப்படியே நிலை வாசலில் நிலையாக இருக்கக் கூடியவை. ஆனால் அது பலபேருடைய கைபட்டு பிசுபிசுப்பாக கருப்பாக மாறி இருக்கும். பழைய நிலைவாசல் கதவை தாழ்ப்பாலை 10 நிமிடத்தில் பளிச்சென்ன சுத்தம் செய்ய சில குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. நிலைவாசல் கதவு சுத்தம் செய்யக்கூடிய வேலையை எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தானே நாம் செய்வோம். அப்போது இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க. கை வலிக்காமல் சுத்தம் செய்ய ஒரு சின்ன ஐடியா அவ்வளவுதான்.

நம்மில் எல்லோருடைய வீட்டில் பெரும்பாலும் நிலை வாசல் கதவு மரத்தால் செய்யப்பட்டதாக தான் இருக்கும். முதலில் சாதாரண துணியை வைத்து உங்களுடைய நிலை வாசல் கதவை துடைத்து விடுங்கள். அதில் இருக்கும் தூசியை எல்லாம் ஒரு பிரஷ் வைத்து நீக்கிவிடுங்கள். அதன் பின்பு ஒரு காட்டன் துணியில் தேங்காய் எண்ணெயை தொட்டு நிலை வாசல் கதவை துடைத்து விட்டால் ஒரே நிமிடத்தில் பளிச் பளிச் என மாறிவிடும்.

- Advertisement -

அடுத்து தாழ்ப்பால் சுத்தம். இதை சுத்தம் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். தாழ்ப்பால், கதவு கைப்பிடி அல்லது லாக்கர் எதுவாக இருந்தாலும் இந்த முறையை பின்பற்றி சுத்தம் செய்யலாம். முதலில் ஒரு கிண்ணத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் புளி, சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பு இந்த இரண்டு பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள். புளியை அந்த உப்பில் தொட்டு லேசாக தண்ணீரில் தொட்டு தாழ்ப்பாலை தேய்க்க வேண்டும். புளியும் உப்பும் சேர்த்து தாழ்ப்பாலை தேய்க்கும் போது அதில் இருக்கும் கருப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க தொடங்கும்.

புளியை தாழ்ப்பாலில் தேய்த்து வைத்திருக்கின்றோம் அல்லவா அதற்கு மேலே பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஒரு பழைய பல் தேய்க்கும் பிரஷ்ஷில் தொட்டு நன்றாக தாழ்ப்பாலை தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு சொட்டு தண்ணீர் தொட்டு தேயுங்கள். நன்றாக நுறை வரும். அப்போது எலுமிச்சம்பழத் தோலை வைத்து மீண்டும் நன்றாக தேயுங்கள். ஐந்திலிருந்து ஏழு நிமிடத்திற்குள் இப்போது மேல் சொன்ன சுத்தத்தை முடித்திருப்பீர்கள். இதை தண்ணீர் போட்டு கழுவாதீங்க. ஒரு துண்டை வைத்து துடைத்து எடுத்து சுத்தம் செய்து விடுங்கள். (நிறைய தண்ணீர் ஊற்றி கழுவினால் கதவில் உள்ள மரத்தில் தண்ணீர் படும். கதவு சீக்கிரம் பழுதடைய வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை தண்ணீரை கொஞ்சமாக பயன்படுத்துங்கள்.)

- Advertisement -

அடுத்தபடியாக சிறிய துண்டு உப்பு காகிதத்தை கிழித்து தாழ்ப்பாலை நன்றாக உரசி தேய்த்து எடுக்க வேண்டும். அப்போது உங்களுடைய தாழ்ப்பாலில் மிச்சம் மீதி இருக்கும் கறையும் சுத்தமாக நீங்கிவிடும். இறுதியாக ஒரு மூடி லைசாலில் பல் தேய்க்கும் பழைய பிரஷை தொட்டு தொட்டு தாழ்ப்பாலை தேய்க்க வேண்டும். தாழப்பாலின் இன்டு இடுக்குகளில் எல்லாம் நன்றாக தேய்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தாழ்பாலை கழுவி கொள்ளுங்கள். இருப்பினும் ஏதோ ஒரு குறை இருப்பது போல உங்களுக்கு தோன்றும். அந்த பளபளப்பை மீட்டு எடுக்கவும் ஒரு குறிப்பு.

லேசாக மஞ்சள் தூளை காட்டன் துணியில் தொட்டு அந்த தாழ்ப்பாலின் மேல் நன்றாக துடைத்து விட்டால், முழுமையாக உங்களுடைய தாழ்ப்பால் புதுசு போல ஜொலிக்க தொடங்கிவிடும். இந்த குறிப்பை படிப்பதற்கு வேண்டும் என்றால் இவ்வளவு பெரிய கஷ்டமா என்று தோன்றலாம். ஆனால் செய்யும்போது உங்களுக்கு மிகவும் சுலபமாக தான் இருக்கும். அதிலும் இந்த சுத்தத்தை செய்து விட்டு உங்கள் நிலை வாசல் கதவை பார்க்கும் போது அப்படியே பளபளப்பாக புதுசு போல இருக்கும்போது, ஒரு திருப்தி ஏற்படும் பாருங்க. அது இல்லத்தரசிகளுக்கு தான் தெரியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. சுத்தத்தால் ஏற்படும் கூடிய மன திருப்தியை நிச்சயம் நீங்க உணர்வீங்க.

- Advertisement -