கைலாய மலையில் தோன்றிய ஓம் வடிவம் – வீடியோ

kailash

இயற்கையும் இறைவனும் ஒன்றாகும். அந்த இயற்கையின் படைப்புகளில் அனைத்தையும் ஞானத்தை கொண்டு பார்க்கும் போது இறைவன் இருப்பதை நாம் உணரலாம். அந்த வகையில் இயற்கையின் படைப்பான உயரமான மலைகள் கடவுளின் ஆற்றலை கொண்டதாக இருக்கிறது. அப்படிப்பட்ட தெய்வீக ஆற்றல்களையும், அதிசயங்களையும் கொண்டது தான் சிவ பெருமான் வீற்றிருக்கும் “கைலாச மலை” அதில் காணக்கிடைத்த ஒரு அதிசய காட்சியை பற்றி இங்கு காண்போம்.

இக்காணொளி திபெத்திய பீடபூமியிலிருக்கும் கைலாச மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு புனித யாத்திரைக்கு சென்ற ஒரு ஆன்மீக யாத்திரீகரால் தனது கேமெராவினால் படமாக்கப்பட்டது. இதில் அந்த கைலாச மலையின் பக்கவாட்டு சரிவில் உலகத்தின் உண்மையாக இருக்கும் “பிரணவ” மந்திரமான “ஓம்” என்கிற மந்திர எழுத்து வெள்ளைப்பனியால் எழுதப்பட்டிருப்பதை போன்ற ஒரு காட்சி தெரிகிறது.

இந்த கைலாச மலை மற்றும் மானசரோவர் ஏரி இருக்கின்ற இந்த திபெத்திய பீடபூமி உலகிலேயே மிக உயரமான மலைகளைக் கொண்ட இமய மலைத் தொடர்களுக்கு வடக்கு புறமாக அமைந்துள்ளது. எந்த ஒரு தீவிர சிவ பக்தர் கூட நினைத்தவுடன் சென்று தரிசிக்க முடியாத புண்ணிய பூமி தான் இந்த கைலாச மலை. அந்த சிவ பெருமானின் அருளின்றி யாரும் கைலாச மலை யாத்திரையை மேற்கொள்ள முடியாது. பல கடினமான பயணப்பாதை மற்றும் சீதோஷண நிலையும் இந்த யாத்திரையை சவால் நிறைந்ததாக மாற்றுகிறது.

இந்த கைலாச மலை ஜைன மதத்தினர் மற்றும் புத்த மதத்தினரும் ஒரு புனித மலையாக கருதி வழிபடுகின்றனர். தெய்வீக மலையாக இது கருதப்படுவதால் யாருமே இந்த மலையின் மீது ஏறாமல் அதன் அடிவாரத்திலேயே இருந்து வழிபடுகின்றனர். சிவ பெருமானின் மீது மிகுந்த பக்தியுடன் இந்த கைலாச மலை பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு இந்த ஓம் என்கிற பிரணவ மந்திரத்தை காட்டி தனது இருப்பை காட்டியுள்ளதை போல, வேறு பல வகைகளிலும் தனது அற்புதங்களை காண்பிப்பார் உலகை காக்கும் அந்த சிவ பெருமான்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிடம் சார்ந்த பல அறிய விடயங்களை தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.