வீட்டில் செல்வம் நிலைக்க உதவும் லட்சுமி காயத்ரி மந்திரம்

Mahalakshmi_1

எவ்வளவு பெரிய பணக்காரனானாலும் சரி பரம ஏழை ஆனாலும் சரி அனைவரது எண்ணமும் தனது வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ அவர்களது வீட்டில் நிச்சயம் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் லட்சுமியை வழிபடுகையில் கூறவேண்டிய லக்ஷ்மி காயத்ரி மந்திரம் இதோ.

mahalakshmi

லட்சுமி காயத்ரி மந்திரம்:
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் ஜபிப்பது மேலும் சிறப்பாகும். மந்திரத்தை ஜெபிக்கும் முன்பு வீட்டில் விளக்கேற்றி பிள்ளையாரையும் லட்சுமி தேவியையும் நன்கு வணங்கிவிட்டு ஜபிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் தீபம் ஏற்றுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அதிஷ்டம் நிச்சயம்

English Overview:
Lakshmi Gayatri mantra in Tamil is for worshiping Goddess Lakshmi. If one chant this mantra then Goddess Lakshmi will bless him to be rich in life.