‘ஓம்’ எனும் மந்திரத்தின் அற்புதம்

om

‘ஓம்’ இந்த வார்த்தையை பல சுலோகங்கள் தொடங்கும் போது முதல் வார்த்தையாக சேர்த்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக ‘ஓம் சரவணபவ’ ‘ஓம் தனலக்ஷ்மியை போற்றி’ இப்படி பல மந்திரங்கள் ‘ஓம்’ என்ற வார்த்தையை உள்ளடக்கியுள்ளது. பல மந்திரத்தில் முதல் வார்த்தையாக கூறப்படும் இந்த ‘ஓம்’ எனும் சொல்லுக்கு இருக்கும் மகிமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

om

‘ஓம்’ என்னும் மந்திரத்தை குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் தான் உச்சரிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை நம் வாயால் உச்சரிக்கும்போது நம் உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும். இந்த உலகத்தில் முதலாவதாக தோன்றிய மந்திரம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

இந்த ‘ஓம்’ என்னும் மந்திரத்தில் ‘ஆ’ ‘ஓ’ ‘ம்’ இந்த மூன்று உச்சரிப்புகளால் உச்சரிக்கப்படுகிறது. ‘ஆ’ என்ற உச்சரிப்பு நம் உடம்பின் கீழிருந்து வயிற்றுப்பகுதி வரை உள்ள இடங்களில் ஆற்றலை ஏற்படுத்துகிறது. ‘ஓ’ என்ற உச்சரிப்பு ஆனது இதயப் பகுதியில் ஆற்றலே ஏற்படுத்துகிறது. ‘ம்’ என்ற உச்சரிப்பானது முகத்தில் உள்ள தசைகளையும் மூளை பகுதியையும் ஆற்றலை ஏற்படுத்துகிறது.

தினமும் காலையில் எழுந்தவுடன் 20 நிமிடங்கள் கண்களை மூடி ‘ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரித்து வந்தால் உங்கள் மூளையில் ‘எண்டார்பின்’ என்னும் ஹார்மோன் சுரப்பி அதிகமாகச் சுரந்து உங்களை அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்குகிறது.

om

- Advertisement -

இரவில் சரியாக தூக்கம் வராதவர்கள் இந்த ஓம் என்னும் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லலாம். ஆழ்ந்த உறக்கத்தின் போது தான் மூளைக்கு அவசியமாக தேவைப்படும் ‘மெலடோனின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.

நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை பெறவும், இரத்த ஓட்டம் சீராகவும், நம் இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த ‘ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரித்து வரலாம்.

om

தேவையற்ற சிந்தனைகளில் இருந்து நம் மனதை காப்பாற்றிக் கொள்ளவும், நமக்கு உண்டாகும் கோபம், வருத்தம், ஏமாற்றம் இவைகளை தாங்கிக் கொள்ளவும், இவைகளினால் நமக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். இதனால் நம்மிடம் உள்ள எதிர்மறை ஆற்றலானது முற்றிலுமாக நீக்கப்படும்.

சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரிப்பதால் உடலில் உள்ள இன்சுலின் சுரப்பி சீராக சுரக்கிறது என்றும், மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வதால் மூட்டு வலியானது குறைகின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே
கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் ஸ்லோகம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Om slokam in Tamil. Om stotram in Tamil. Om slogam. Om Mantra in Tamil. Om mandhiram. Om slogan benefits in Tamil.