கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் ஸ்லோகம்

hayagreevar

நம் குழந்தைகளுக்கு அறிவு திறன் வளர்வதற்கு கல்வி மிகவும் அவசியமானதாகும். சில குழந்தைகளால் அந்த கல்வியில் சிறந்து விளங்க முடியாது. ஞாபக மறதி, சோம்பல் இவைகளின் காரணமாக அவர்களுக்கு கல்வி கற்பதில் சில தடைகள் ஏற்படும். அந்த தடைகள் நீங்கி, நம் குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் ஒரு சிறந்த வழி உள்ளது. அது தான் ஹயக்ரீவ மந்திரம். உங்கள் குழந்தைகளின் கல்வி நலனுக்கான ஹயக்ரீவர் ஸ்லோகம் இதோ..

Hayagriva-mantra-1

ஹயக்ரீவர் ஸ்லோகம்:

சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம்
சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

ஹயக்ரீவர் சிறப்பு

hayagriva

அசுரர்களிடம் இருந்து வேதங்களை காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் ஹயகிரீவர். வேதங்களை மீட்ட ஹயகிரிவர் அதனை பிரம்மனிடம் ஒப்படைத்தார். வேதங்களை மீட்டதற்கு பிறகும், ஹயக்ரீவரின் கோவம் அடங்கவில்லை. லட்சுமிதேவி தன் அருகில் வந்த பிறகு தான் குறைந்தது. இதனால் இவரை லட்சுமி ஹயக்ரீவர் என்றும் அழைப்பர். இந்த லட்சுமி ஹயக்ரீவர் சரஸ்வதிக்கு குருவாக இருந்தவர் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் ஹயக்ரீவரின் முகமானது குதிரை வடிவம் போன்றது. வேகம், ஆற்றல், திறன், புத்திக்கூர்மை இவையெல்லாம் குதிரையிடம் அதிகமாக உள்ளது. குதிரைக்கு உள்ள சக்தியினை மாணவர்களும் பெற்றால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது உண்மை. கல்வியில் பின் தங்கிய குழந்தைகள் ஹயக்ரீவருக்கு நெய் தீபம் ஏற்றி, ஏலக்காய் மாலை அணிவித்து இந்த மந்திரத்தை தினமும் பதினோரு முறை உச்சரிப்பதன் மூலம் அவர்களின் ஞாபகசக்தியும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
தினமும் ஒரு முறையாவது சொல்ல வேண்டிய நவக்கிரக மந்திரங்கள்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.