திருஞானசம்பந்தர் பாடிய திருமுறையில் ஒரு பாடல் போதும். இறைவனிடமிருந்து என்ன வரத்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

Thirugnana-sambandar2
- Advertisement -

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவர்கள் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என்று அழைக்கப்பட்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் முதலில் கூறப்படும் நான்கு நாயன்மார்களில் ஒருவர் இவர். 7ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் சிவபாதவிருதயர். இவரது தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது தன் தாய் தந்தையுடன் கோயிலுக்கு சென்றதாகவும், அந்த கோவிலில் சம்பந்தரை, கரையில் அமர வைத்துவிட்டு, குளிக்க சென்ற தாய்தந்தையர் சிறிது நேரம் நீரில் மூழ்கி இருந்தபோது, தாய் தந்தையரை காணவில்லை என்று அழுத குழந்தைக்கு சிவபெருமானும், அம்பாளும் காட்சிதந்து ஞானப்பால் ஊட்டியதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே ஞானப் பாலை குடித்ததால் இவருக்கு ஞானசம்பந்தர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஞானசம்பந்தர் தேவாரத்தை பாடியது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இதேபோல் திருஞானசம்பந்தர் பாடிய திருமுறை பாடல்கள் 12 ல் மூன்றாம் திருமுறையான இந்தப் பாடலை தினம்தோறும், எம்பெருமானை நினைத்து நாமும் உச்சரித்து வர நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்காக திருஞானசம்பந்தர் பாடிய மூன்றாம் திருமுறை பாடல் இதோ.

Thirugnana-sambandar

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

- Advertisement -

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

இந்தப் பாடலின் பொருள்:

- Advertisement -

parkadal

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது தோன்றிய நஞ்சினை, கழுத்தில் வாங்கிக்கொண்டு தேவர்களை காத்த தேவர்களுக்கெல்லாம் நாயகனே! மனிதப்பிறவி எடுத்த நான் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள், எவ்வளவு இன்னல்கள், எவ்வளவு இடையூறுகள், வந்தாலும், இளமையை விட்டு முதுமைக்கு சென்று தளர்ச்சி அடைந்தாலும், நான் செய்த முன்வினைப் பயனால் நோய்கள் என்னை தொடர்ந்து வந்தாலும், மனிதனாக பிறவி எடுத்த நாம் உன் பாதங்களை தொழுது வழங்குவேன். இப்படியாக உன்னை சரணடைந்த எனக்கு தேவைப்படுகின்ற பொருளை தரவில்லை என்றால் அது உன் திருவருளுக்கு எப்படி அழகாகும்?

Thirugnana-sambandar1

என்ன நாசுக்கான வரிகள். ‘எனக்கு எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் இறைவனாகிய உன் பாதங்களை சரண் அடைந்து விட்டேன்’. எனக்கு தேவைப்படும் பொருட்களை நீதானே தர வேண்டும். அதுதானே உனக்கு அழகு என்று இறைவனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டால், அவர் நமக்கு தேவைப்படுகின்ற வரங்களை எல்லாம் தராமல் போய் விடுவாரா? நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படுகின்ற பொருள் என்னவோ அதை மட்டும்தான் இறைவன் நிச்சயம் உங்களுக்கு வழங்குவார். இப்பிறப்பில் எவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அவை அனைத்தும் யார் தடுத்தாலும் நம் கைக்கு வந்து சேர்ந்து விடும். இந்தப் பிறவியில் எவையெல்லாம் கிடைக்கக்கூடாது என்று உள்ளதோ அதை நம்மால் நிச்சயம் பெறவே முடியாது. இதுதான் வாழ்க்கையின் நீதி. புரிந்து கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். புரியாதவர்களுக்கு வாழ்க்கையே கிடைக்காது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thirugnanasambandar songs in Tamil. Thirugnanasambandar padalgal. Thirugnana sambandar in Tamil. Thirugnana sambandar thevaram in Tamil.

- Advertisement -