இந்த ஒரு சொல்லை சொன்னால் அனைத்து மந்திரங்களையும் கூறியதற்கான பலன் கிடைக்கும்

ambigai

நாம் பல விதமான மந்திரங்களை தினம் தினம் 108 முறை 1008 முறை என ஜெபிக்கின்றோம். அனால் ஒரே ஒரு சொல்லை மட்டும் சொன்னால் போதும் அபிராமி அம்மனுக்குரிய அனைத்து மந்திரங்களையும் ஜபித்ததற்கான பலன் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அது என்ன சொல்ல? அந்த சொல்லுக்கு பின் ஒளிந்துள்ள வரலாறு என்ன? வாருங்கள் பார்ப்போம்.

kanji kamatchi amman

பூலோகத்தை அனலன் என்னும் அசுரனால் மக்களுக்கும், ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பம் நேர்ந்தது. இதுகுறித்து அம்பிகையிடம் அனைவரும்
முறையிட்டு வேண்ட, காளி உருவெடுத்த அம்பிகை பூலோகம் வந்து அந்த அசுரனை அழித்தால்.

அதிபயங்கர உக்ரத்தோடு இருந்த காளியை சிவன் சாந்தப்படுத்தி மணந்து கொண்டார்.சாந்தமான காளி மிகவும் பொலிவோடும், அற்புத அழகோடும் இருந்ததால் அவள் “அபிராமா அம்பிகை” எனப் பெயர் பெற்றாள்.

anuman-amman

அழுகு என்பதே அபிராமம் என்ற சொல்லுக்குரிய பொருளாகும். அழகின் சொரூபமான அந்த அபிராமியே திண்டுக்கல்லில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருபாலிக்கிறாள்.அபிராமா அம்பிகை என்ற பெயரே காலப்போக்கில் அபிராமி அம்பிகை என்று மருவியது.

amman

இங்குள்ள அபிராமி அம்மனை அவளின் உண்மை பெயரான “அபிராமா” என்று மனமுருகி ஒரே ஒரு முறை அழைத்து வேண்டினாலே போதும், அம்பிகைக்குரிய அனைத்து மந்திரங்களையும் சொன்னதற்கான பலன் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.