இப்படி ஒரு புதுவிதமான சட்னியை, இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!

malli-chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு வழக்கம்போல தேங்காய் சட்னி, சாம்பார், வெங்காய சட்னி, கார சட்னி, தானா! புது விதமான பொருட்களை வைத்து, புது விதமான சட்னியை செய்து நம் வீட்டு குழந்தைகளிடமும், கணவரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டாமா? உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே புதுவிதமாக கொத்தமல்லி, வரமல்லி, எள்ளு வைத்த சட்னியை எப்படி புதுவிதமாக செய்யப்போகிறோம் என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Step 1:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து விட்டு அதில், 2 டேபிள் ஸ்பூன் வரக் கொத்தமல்லி போட்டு வாசனை வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். எண்ணெய் ஊற்ற வேண்டாம் ட்ரைவாகவே வறுத்துக் கொள்ளுங்கள். வரமல்லி நன்றாக ஒரு நிமிடம் வழிபட்ட பின்பு, 2 டேபிள்ஸ்பூன் எள்ளு சேர்த்து வர மல்லியையும், எள்ளையும் வாசம் வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். முதலில் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 6, பூண்டு தோல் உரித்தது – 10 பல், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4 பொடியாக நறுக்கியது, சிறிய நெல்லிக்காய் அளவு அளவு – புளி, இவைகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

onion

அதாவது, முதலில் பருப்பு முக்கால் வாசி சிவக்க வேண்டும். அதன் பின்பாக பூண்டு சேருங்கள். பூண்டு பாதி அளவு வதங்கியவுடன் வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் பாதி அளவு வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வழங்கிவிட வேண்டும். இறுதியாக தேவையான அளவு உப்பை தூவி, 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைத்து விடுங்கள் தக்காளியின் பச்சை வாடை சுத்தமாக போனால்தான் சட்னி சுவையாக இருக்கும்.

- Advertisement -

இறுதியாக மூன்று கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை போட்டு, 2 நிமிடங்கள் நன்றாக வதக்கி இந்த விழுதை ஆறவிட வேண்டும். அதன்பின்பு, மிக்ஸி ஜாருக்கு மாற்றி, இந்த விழுதோடு அரைத்து வைத்திருக்கும் மல்லி எள்ளு சேர்த்த மசாலா பொடியையும் போட்டு, கொஞ்சம் திப்பி திப்பியாக அரைத்தால் சட்னி தயாராகிவிடும். மொழுமொழுவென்ற அரைத்தால் சட்னி சுவையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

chutney1

ஒரு சிறிய தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, இறுதியாக கடுகு, வரமிளகாய், பெருங்காயம் கறிவேப்பிலை, தாளித்து கொட்டி  வாசத்தோடு, சட்னியை பரிமாறிப் பாருங்கள். புது விதமான சுவையில், புதுவிதமான சுலபமான சட்னி தயார்! உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
எலுமிச்சை பழத்தை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே! இனி நிறைய காசு மிச்சப்படுத்தலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -